Free Space

5 வயது சிறுமியின் உயிரை பறித்த தந்தையின் குடி போதை.



ஆனமடுவ பங்கதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் பெண் குழந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

அவரின் தாய் , தந்தை மற்றும் ஒரு வயதுடைய சகோதரியும் இதன் போது காயமடைந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

நேற்று இரவு 8.15 மணியளவில் ஆனமடுவையில் இருந்து பங்கதெனிய நோக்கி பயணித்த கெப் ரக வாகனமொன்றும் எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த  5 வயதுடைய சிறுமியே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்தவர்கள்   ஆனமடுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண் குழந்தையின் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

விபத்து தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் விபத்தின் போது மது போதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் ஆனமடுவ காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
5 வயது சிறுமியின் உயிரை பறித்த தந்தையின் குடி போதை. 5 வயது சிறுமியின்  உயிரை பறித்த தந்தையின் குடி போதை. Reviewed by Madawala News on 8/19/2016 09:34:00 AM Rating: 5