Free Space

கடந்த 6 மாத அரசாங்கத்தின் வரி வருமான விபரம் வெளியிடப்பட்டது.

கடந்த ஆறு மாதத்திற்குள் அரசாங்கத்தின் வரி வருமானம் 100 பில்லியன் ரூபாவை விட உயர்வடைந்துள்ளதாக, இணை அமைச்சரவைப் பேச்சாளர், பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டதாக கயந்த கருணாதிலக்க இதன்போது சுட்டிக்காட்டினார்.
.

இதற்கமைய, தேசிய வரி வருமானம் 22%மாகவும், கலால் வரி வருமானம் 22%மாகவும், சுங்க வரி வருமானம் 40% மாகவும் அதிகரித்துள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.
.

உரிய முகாமைத்துவத்துடன் செயற்பட்டதாலேயே இவ்வாறு வரி வருமானத்தை அதிகரிக்க முடிந்துள்ளதாக, அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 6 மாத அரசாங்கத்தின் வரி வருமான விபரம் வெளியிடப்பட்டது. கடந்த 6 மாத அரசாங்கத்தின் வரி வருமான விபரம் வெளியிடப்பட்டது. Reviewed by Madawala News on 8/17/2016 05:06:00 PM Rating: 5