Ad Space Available here

70 வயது மகிந்தவால் இனிமேல் ஒன்னும் செய்ய முடியாது.. 2020 ஆம் ஆண்டும் தேசிய அர­சாங்­கமே அமைக்­கப்­படும்.எதிர்­வரும் 2020 ஆம் ஆண்டு நடை­பெறும் பொதுத் தேர்­தலின் பின்­னரும் தேசிய அர­சாங்­கமே அமைக்­கப்­படும் என்று அமைச்சர் ராஜித சேனா­ரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டை சூறை­யா­டிய கொள்­ளை­யர்கள் புதிய கட்சி அமைப்­பதன் மூலம்
ஒரு­போதும் ஆட்­சியை கவிழ்க்க முடி­யாது. இவர்­க­ளது கடந்­த­கால அநி­யா­யங்கள், அட்­டூ­ழி­யங்கள், மோச­டிகள் படிப்­ப­டி­யாக அம்­ப­ல­மாகி வரு­கின்­றன. இன­வா­தி­களை தம்­வசம் வைத்­துக்­கொண்டு வேறு கட்சி அமைக்க முயலும் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு மீண்டும் ஒரு­போதும் ஆட்­சியை கைப்­பற்ற முடி­யாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பேரு­வளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிர­தம அமைப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பட்­டயப் பொறி­யி­ய­லாளர் எம்.எம்.எம்.அம்­ஜாதை வர­வேற்கும் வைபவம் நேற்று முன்­தினம் பேரு­வளை சாரா மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. இவ் வைப­வத்தில் உரை­யாற்றும் போது அமைச்சர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.
அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த, மாகாண சபை அமைச்சர் சுமித்லால் மெண்டிஸ், பேரு­வளை முன்னாள் நகர பிதா மஸாஹிம் முஹம்மத் உட்­பட நகர சபை, பிர­தேச சபை முன்னாள் உறுப்­பி­னர்கள், பெரு­ம­ள­வி­லான மக்கள், பங்கு பற்­றிய இக் கூட்­டத்தில் அமைச்சர் ராஜித சேனா­ரத்ன மேலும் கூறி­ய­தா­வது,

70 வயது தாண்­டிய பின்னர் புதிய கட்­சி­யொன்றை அமைக்க முயற்சி செய்யும் மஹிந்த ராஜபக்ஷவினால் நாட்­டுக்கோ நாட்டு மக்­க­ளுக்கோ எந்தப் பலனும் கிட்டப் போவ­தில்லை. 30 தொடக்கம் 40 வயது காலத்தில் அவர் கட்­சி­யொன்றை ஆரம்­பித்­தி­ருந்தால் 60 தொடக்கம் 70 வரு­டங்­க­ளாகும் போதா­வது மாற்­ற­மொன்றை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தி­ருக்கும்.

நாட்டை சூறை­யா­டிய மாபெரும் கொள்­ளை­யர் கோஷ்­டி­யினர் புதிய கட்சி அமைப்­பதன் மூலம் ஒரு போதும் ஆட்­சியை கவிழ்க்­கவே முடி­யாது. நாட்டை அதல பாதா­ளத்­திற்கு இட்டுச் சென்று மக்­களின், நாட்டின் வளங்­களை விழுங்­கிய மஹிந்த ராஜபக் ஷ குடும்­பத்தின் கடந்த கால அநி­யா­யங்கள், அட்­டூ­ழி­யங்கள், மோச­டிகள் படிப்­ப­டி­யாக அம்­ப­ல­மாகி வரு­கி­ன்றன.

இன­வா­தத்­திற்கும் மத­வா­தத்­திற்கும் உற்­சா­க­ம­ளித்து சமூ­கங்­க­ளுக்­கி­டையே பிள­வு­களை, பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்தி அர­சியல் லாபம் பெற முயன்ற மஹிந்­தவின் சர்­வா­தி­கார ஆட்­சிக்கு நாட்டு மக்கள் முற்­றுப்­புள்ளி வைத்­தனர்.

ராஜபக் ஷ யுகத்­திற்கு மக்கள் சாவு­மணி அடித்­து­விட்ட நிலை­யிலும் கூட இன்று வேறு கட்சி அமைத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்­சியை பிளவுப­டுத்த முயல்­கிறார்.

டி.ஏ.ராஜபக் ஷவின் புதல்வர் ஒருவர் இப்­ப­டி­யான அநி­யா­யத்தை செய்­வதை மக்கள் சிறிதும் விரும்­ப­வில்லை. பச்சை பச்­சை­யான இன­வா­தி­களை தன் வசம் வைத்துக் கொண்டு வேறு கட்சி அமைக்க முயலும் மஹிந்த ராஜபக் ஷவுக்கு மீண்டும் ஒரு போதும் ஆட்­சியை கைப்­பற்ற முடி­யாது. 2020 ஆம் ஆண்டில் நடை­பெறும் பொதுத் தேர்­தலின் பின்­னரும் தேசிய அர­சாங்­கமே உரு­வாகும்.

நாட்டில் நல்­லாட்சி மலர்ந்­துள்­ளது. சகல சமூ­கத்­த­வர்­களும் ஒற்­று­மை­யாக வாழ்­கின்­றனர். மஹிந்­தவின் ஆட்­சியில் இன­வாதம் தலை­வ­ரித்­தா­டி­யது. கோத்­தா­பய ராஜபக் ஷ ஒரு மாபெரும் இன­வாதி. அவரை பேரு­வ­ளைக்கு அழைத்து சிலர் புரி­யாணி கொடுத்­ததன் மூலம் முழு நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கும் இந்த சுய­ந­ல­வா­திகள் அநீதி இழைத்­தனர்.

பேரு­வ­ளையில் நடந்த அநி­யா­யமே மஹிந்­தவின் தோல்­விக்கு பிர­தான கார­ண­மாகும். சர்­வா­தி­கார ஆட்­சிக்கு முற்­றுப்­புள்ளி வைத்து நல்­லாட்­சியை நாட்டில் மக்கள் உத­ய­மாக செய்­ததன் மூலம் புதிய அர­சியல் கலா­சாரம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

பேரு­வளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்­பா­ளரை வர­வேற்க இன்று ஐ.தே.கட்­சி­யி­னரும் சமு­க­ம­ளித்­துள்­ளனர். இந்த முன்­மா­திரி மிக்க அர­சியல் கலா­சாரம் நாட்டில் தொடர வேண்டும். ஜனா­தி­பதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்­சி­யையும் பிர­தமர் ஐ.தே.கட்­சி­யையும் சேர்ந்­தவர்கள். அமைச்­ச­ர­வையில் இரு கட்­சி­க­ளையும் சேர்ந்­த­வர்கள் அங்கம் வகிக்­கின்­றனர்.

புதிய அமைப்­பாளர் எம்.எம்.அம்ஜாத் ஒரு படித்தவர். பேருவளை மக்களுக்கு மாகாண சபை மூலம் அதிக சேவைகளைச் செய்தவர். அவருடன் இணைந்து பேருவளை மக்கள் செயற்பட வேண்டும். ஸ்ரீங்கா சுதந்திரக் கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட ஒருவரே இன்று பேருவளைக்கு புதிய அமைப்பாளராக ஜனாதிபதி நியமித்துள்ளார் என்றும் அவர் கூறினார்.
70 வயது மகிந்தவால் இனிமேல் ஒன்னும் செய்ய முடியாது.. 2020 ஆம் ஆண்டும் தேசிய அர­சாங்­கமே அமைக்­கப்­படும். 70 வயது மகிந்தவால் இனிமேல் ஒன்னும் செய்ய முடியாது..  2020 ஆம் ஆண்டும் தேசிய அர­சாங்­கமே அமைக்­கப்­படும். Reviewed by Madawala News on 8/30/2016 10:04:00 AM Rating: 5