8 மில்லியன் நிதியில் இரு வீதிகளின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைப்பு

-பைஷல் இஸ்மாயில் - 

அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திதிணைக்களத்துக்கு சொந்தமான இறக்காமம் பிரதேச மாணிக்கமடு மற்றும் ஜும்ஆப் பள்ளிவீதிகளின் அபிவிருத்தி வேலைகள் நாளை திங்கட்கிழமை (15) ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யு.கே.ஜபீர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

8 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த இரு வீதிகளையும் ஆரம்பித்து வைப்பதற்காக கிழக்கு மாகாண அமைச்சர்களான வீதிஅபிவிருத்தி அமைச்சர் ஆரியபதி கலப்பத்தி மற்றும்சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் ஆகியோர்களினால் இறக்காமம் ஆலையடிச்சந்தியில் ஆரம்பித்து வைக்கவுள்ளனர்.

இறக்காமம் பிரதேச மாணிக்கமடு வீதிக்கு 4 மில்லியன் ரூபாவும், இறக்காமம் ஜும்ஆப் பள்ளி வீதிக்கு 4 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த இரு வீதிகளின் அபிவிருத்தி வேலைகள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் வேண்டுகோளுக்கமைவாகவே இது ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் யு.கே.ஜபீர் மேலும் தெரிவித்தார்.

8 மில்லியன் நிதியில் இரு வீதிகளின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைப்பு 8 மில்லியன் நிதியில் இரு வீதிகளின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பித்து வைப்பு Reviewed by Madawala News on 8/14/2016 10:36:00 AM Rating: 5