Kidny

Kidny

தம்புள்ள மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு. #accident

(ஜே.எம்.ஹபீஸ்)

தம்புள்ளை வேவல பிரதேசத்தில் இடம் பெற்ற வாகன விபத்து ஒன்றில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்தனர்.

(7.8.2016 ம் திகதி மாலை 7.30 மணி அளவில) வேவல பிரதேசத்தில் இருந்து தம்புள்ளையை நோக்கிச் சென்ற பெக்கோ இயந்திரம் ஒன்றும் தம்புள்ளை பிரதேசத்தில் இருந்து வேவலையை நோக்கி வந்த மோட்டார் சைக்கில் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்தில் கடும் பாயங்களுக்கு உள்ளாகியுள்ள மோட்டார் சைக்கிலில் வந்த இருவரும் தம்புள்ளை வைத்திய சாலையில் அனுமதித்த பின் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் தம்புள்ளை கண்டலம பிரதேசத்தை சேர்ந்த நுவன் சமிந்த பாலசூரிய ( 26 வயது) சுசந்த பிரதீப் (26 வயது) ஆகிய இருவருமாவார்கள். இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலீஸார் மேற்கொண்டுள்ளனர

தம்புள்ள மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு. #accident தம்புள்ள மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு. #accident Reviewed by Madawala News on 8/09/2016 07:24:00 AM Rating: 5