Free Space

எரிக்கப்பட்ட மஸ்ஜித் அக்ஸா நினைவுகளும் கடமைகளும். #aqsa




அஷ்ஷெய்க் ரு.மு.றமீஸ் (நளீமி)
விரிவுரையாளர் பாதிஹ் கல்விநிறுவனம்

21.08.1969 என்ற தினம் ஒரு முஸ்லிம் மறக்க கூடாத மறக்க முடியாத ஒரு தினமாகும்.

அன்றுதான் எமது முதல் கிப்லாவும் மூன்றாவது புனிதத்தளமுமான மஸ்ஜித் அக்ஸா தீ மூட்டப்பட்ட தினமாகும்.இன்று 47 வருடங்களாகிவிட்டன. இது ஏனைய பள்ளிவாசல்களை போன்று ஒரு சாதாரண பள்ளிவாசல் அல்ல இது ஒரு சாதாரண பிரச்சினையுமல்ல. இது அகீதாவோடு தொடர்பான ஒரு முதன்மை பிரச்சினையாகும்;. இவ்வகையில் இதன் முக்கியத்துவம், இதன்மீதான எமது கடமைகள்  போன்றவற்றை நோக்குவது மிகவும் பொருத்தமானது என்று கருதுகின்றேன்.

மஸ்ஜித் அக்ஸாவின்; முக்கியத்துவம்

மக்காவில் உள்ள மஸ்ஜிதுல் ஹராம் மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன்னபவியை தொடர்ந்து இது முக்கியத்துவம் பெறுகின்றது. இப்பள்ளிவாசலை தரிசித்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது சுன்னத்தாகும். புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட மூன்று பள்ளிவாசல்களும் இவைதான். இங்கு தொழுவது 500 மடங்கு நன்மைகளை பெற்றுத்தரக்கூடியது.

மூன்று பள்ளிவாசல்கள் தவிர்ந்து ஏனைய இடங்களுக்கு புனித பயணம் மேற்கொள்ள கூடாது. அவை மஸ்ஜிதுல் ஹராம், எனது இந்த பள்ளிவாசல் (மஸ்ஜிதுன்னபவி) மஸ்ஜிதுல் அக்ஸா போன்றவையாகும்.
(புகாரிஃமுஸ்லிம்ஃஇப்னு மாஜாஃஅபூதாவுத்)
அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரழி)

மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது (ஒரு லட்சம் மடங்கு நன்மையை தரும். எனது பள்ளியில் (மஸ்ஜிதுன்னபவி) தொழுவது 1000 மடங்காகும். பைதுல் மக்திஸில் தொழுவது 500 மடங்கு நன்மைகளை தரும்
(தபரானி)

நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு முதலாவது முறை வந்தபோது அன்சார்களின் காணியில் இறங்கி பைதுல் மக்திஸை நோக்கி தொழுதார்கள்.
(புஹாரி)
                             அறிவிப்பவர் : பர்ரா இப்னு ஆஸிப் (ரழி)
நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும்போது (ஹிஜ்ரத்துக்கு முன்னர்) பைதுல் மக்திஸை நோக்கி தொழுதார்கள். ஹிஜ்ரத்தின் பின்னர் 16 மாதங்கள் பைதுல் மக்திஸை நோக்கி தொழுதார்கள். பின்னர் கஃபாவை நோக்கி முகத்தை திருப்பினார்கள்.                    
  (இமாம் தபரி தனது வரலாற்றில்
    அறிவிப்பவர் கதாதா(ரழி)
பூமியில் முதலாவது தோன்றிய பள்ளிவாசல் எது? என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர் 'மஸ்ஜிதுல் ஹராம்' என்றார்கள். அதன்பிறகு எது என்று நான் கேட்டபோது' அல் மஸ்ஜிதுல் அக்ஸா' என்றார்கள்
அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ரழி)
புஹாரி ஃ முஸ்லிம் ஃ நஸாஇ
பைதுல் மக்திஸ் தொடர்பாக எங்களுக்கு சொல்லுங்கள் என்று நாம் கேட்டபோது 'அங்கு சென்று தொழுகையை நிலைநாட்டுங்கள். உங்களுக்கு அங்கு போக முடியாவிட்டால், விளக்கெறிக்க எண்ணெய் அனுப்புங்கள் என்றார்கள்.
அறிவிப்பாளர் மைமூனா (ரழி)
அபூ தாவுத் ஃ இப்னு மாஜா
முஃமின்களின் தாயும் நபி (ஸல்) அவர்களின் மனைவியுமான உம்மு ஸலமா (ரழி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் 'யார் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து உம்றாவுக்கு அல்லது ஹஜ்ஜுக்கு செல்கிராரோ அவரது முன் பின் பாவங்கள் மன்னிக்கப்படும். அல்லது அவருக்கு சுவனம் கடமையாகிவிட்டது என்று  கூறிவிட்டு 'வகிஃ அவர்களுக்கு அல்லாஹ் அருள்புரியட்டும். அவர் பைதுல் மக்திஸில் இஹ்ராம் கட்டிவிட்டு (மக்காவுக்கு சென்றார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவிமடுத்தேன் என்றார்கள்.       (அபூ தாவுத்)
பைஹகி, இப்னு ஹிப்பான் போன்ற கிரந்தங்களில் வரும் ஹதீஸ் 'யார் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து உம்ராவுக்கு செல்கிராரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபியவர்கள் கூறினார்கள் இவ்வாறு கூறிவிட்டு உம்மு ஹகீம் அவர்கள் பைதுல் மக்திஸுக்கு சென்று அங்கிருந்து உம்ராவுக்கு வந்தார்கள் என்று கூறினார்.
எனது சமூகத்தில் ஒருசாரார் சத்தியத்தில் மிகைத்தும், எதிரிகளை அடக்கிக்கொண்டும் இருப்பார்கள். அவர்களோடு மோதுவது –  சில பலவீனங்கள் ஏற்படுவதை தவிர - பெரிய பாதிப்பு எதனையும் ஏற்படுத்தாது. அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்கள் அதே நிலையில் தொடர்ந்திருப்பார்கள். அப்போது சஹாபாக்;கள் 'அவர்கள் எங்கு இருக்கிறார்கள்? என்று கேட்டபோது 'பைதுல் மக்திஸிலும் அதனை சூழுவுள்ள பிரதேசங்களிலும்' என்று குறிப்பிட்டார்கள்.
 அஹ்மத்ஃதபறானி
அறிவிப்பவர் : அபூ உமாமா அல்பாஹிலி (ரலி)
இது அருள்புரியப்பட்ட பூமி என்று அல்குர்ஆன் குறிப்பிடுகிறது. 'தனது அடியானை இரவில் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து அருள் சூளப்பட்ட மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு அழைத்து சென்றவன் மிகவும் தூய்மையானவன்'  (இஸ்ரா-01) இங்கு மஸ்ஜிதுல் அக்ஸாவை சூழ அருள் செய்திருப்பதாக, பரகத் உள்ளதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான். இந்த அருள், அறிவு, பொருளாதாரம், ஆன்மீகம், உற்பத்தி... போன்ற பல துறைகளில் காண்கிறோம்.
'நாம் அவரையும் (இப்றாஹீம் அலை) லூத் அலை அவர்களையும் அருள்செய்யப்பட்ட பூமியில் பாதுகாத்தோம். (அன்பியா 71) இது ஷாம் பூமியை குறிப்பதாக இமாம் இப்னு கஸீர் குறிப்பிடுகிறார். இது பலஸ்தீனை மிக குறிப்பாக குறித்துக்காட்டும் ஒரு வசனமாகும்.



மஸ்ஜித் அக்ஸா என்பது எதனைக்குறிக்கும்?
அக்ஸா என்பது உமைய ஆட்சியாளர் அப்துல் மலிக் இப்னு மர்வானால் நபியவர்கள் தடம்பதித்து இராப்பயணம் (மிஃராஜ்) சென்ற கற்பாரையின்மீது கட்டப்பட்ட கும்மட்டமுள்ள அழகிய கட்டிடமான குப்பது ஸக்ராவை (னுழஅந ழக வுhந சுழஉம) குறிப்பதாக சிலர் நினைக்க அது உமர் (ரலி) அவர்களால் கட்டப்பட்ட மஸ்ஜிதுல் கிபலி என்று வேறுசிலர் வியாக்கியானம் கூறுகின்றனர். அக்ஸா வளாகத்தில் உள்ள முக்கியமான அடையாளங்களே இவையாகும்.
அக்ஸா என்பது  வடக்காக 310 மீட்டர் அகலமும் கிழக்காக 362 மீட்டர் நீளமும் தெற்காக 281 மீட்டர் அகலமும் மேற்காக 491 மீட்டர் நீளமும் கொண்ட நான்கு சுவர்களுக்கும் உட்பட்ட பகுதியாகும். இது குத்ஸ் நகரத்தில் அமைந்துள்ளது.
குப்பது ஸக்ரா, மஸ்ஜிதுல் கிபலி இந்த இரண்டில் எந்தவொன்றையும் அக்ஸா என்று குறிப்பிடுவதற்கு நாம் மறுப்பு சொல்ல தேவையில்லை. இரண்டின் மூலமும் அக்ஸா மீதான பற்றை ஏற்படுத்துவதுதான் எமது இலக்காக இருக்க வேண்டும்.

எறிக்கப்பட்ட நிகழ்வுகள்
சுற்றுளா விசாவில் பிரவேசித்த டெனிஸ் மைகல் ரொஹான்; என்ற அவுஸ்திரேலிய நாட்டு பிரஜையும் யூத குழுக்களும் இணைந்து மேற்கொண்ட நாசகார செயல்பாட்டின் காரணமாக 21ஃ08ஃ1969 ஆம் தினத்தில் மஸ்ஜிதுல் அக்ஸாவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் கிபலியின்  தென்பகுதி பெரும் பாதிப்புக்குள்ளாகிவிட்டது. அக்ஸாவின் சுவர்கள், தளபாடங்கள்,நூருத்தீன் மஹ்மூத் ஸன்கி அவர்களால் தயாரிக்கப்பட்டு சலாஹுத்தீன் ஐயூபியினால் வைக்கப்பட்ட சிலுவை யுத்த வெற்றியின் சின்னமான மிம்பர் உட்பட மஸ்ஜித் கிப்லியின்1ஃ3 பகுதி (4500 மீட்டர் பரப்பில் 1500 மீட்டர் பரப்பு) எரிந்து நாசமாகியது. அதன் பழைமை பொருந்திய வேலைப்பாடுகள், தூன்களுக்கு கூட பெரும் பாதிப்பு எற்பட்டது. அதன் கூரையும் குப்பாவை சுமந்திருந்த இரண்டு பிரதான தூண்களும் இடிந்து விழுந்துவிட்டன. வேலைப்பாடுகள் நிறைந்த தூய வெள்ளியினாலான மினுமினுப்பான குப்பா, மிஹ்ராப், தென் சுவர், வர்ணம் தீட்டப்பட்ட கண்ணாடிகளாலான 74 யன்னல்கள், போன்றவையும் பலத்த சேதங்களுக்குட்பட்டது. சுஜுத் செய்வதற்கான விரிப்பு முற்றாக எரிந்து நாசமாகியது. இது 1969 இல் நிகழ்ந்த நிகழ்வாகும்.
இதன் பின்னரும் பல அநீதிகளை அதற்கு செய்துள்ளார்கள். பலஸ்தீனர்கள் அதனை இலகுவில் நெறுங்க முடியாத பிரகாரம் மதில்களை அமைத்துள்ளனர். அதன் கீழால் சுரங்கங்களை தோண்டியுள்ளனர். அதற்குள் பிரவேசிக்க தடை விதிக்கின்றார்கள். மேற்குப்புற வாயிலால் (ஆயபயசiடி புயவந) அடிக்கடி நுழைந்து தௌராத்திய வணக்கங்களில் ஈடுபடுகின்றனர். இங்கு யூதர்கள் கூடி வணக்கங்களில் ஈடுபடுவதற்காக வேண்டி முஸ்லிம்கள் வந்துபோக முடியாத பிரகாரம்; பாலம் அமைத்துள்ளார்கள். பலாத்கார பிரவேசத்திற்கு அறைகூவல் விடுத்து ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணையுடன் பலப்பிரவேசம் மேற்கொள்கின்றனர்.
கடந்த வருடம் 19ஃ09ஃ2015 இல் மஸ்ஜித் கிபலியில் பிரவேசித்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். இதனால் அக்ஸாவுககு பலத்த சேதம் ஏற்பட்டது. இதனை ஆக்கிரமிப்பு இஸ்ரேல் வழமைபோல நிலநடுக்கம் என்று கூறி மக்களின் கவனத்தை திசைதிருப்பியது.
இந்த ரமழானில் கூட (26ஃ06ஃ2016) மஸ்ஜிதுல் கிபலியில் ஆட்கள் பிரவேசிக்க முடியாமல் சங்கிலிகளால் பிணைத்துவிட்டார்கள். உணர்வுள்ள இளைஞர்கள் அதனை துண்டித்து விட்டார்கள்.
நாளாந்தம் பல கெடுபிடிகளுக்குள்ளால் எமது சகோதர சகோதரிகள், ஆண் பெண்கள், சிறுவர் சிறுமியர்கள் இங்கு பிரவேசித்து இஃதிகாப் இருந்து மசாதிப் என்ற மேடைகளில் கற்று இதனை பாதுகாத்து இங்கு நடக்கும் அட்டூளியங்களை உலகரியச்செய்து எமது முதல் கிப்லாவை பாதுகாக்கும் பணியில் எமது பிரதிநிதிகளாக நின்று தம்மை அர்ப்பணித்துள்ளனர்.
அக்ஸா யாருடையது?
அக்ஸாவில் எமக்கும் உரிமையுண்டு என்பதுபோன்ற ஒரு கருத்துமாயை யூதர்களால் திட்டமிட்டு உறுவாக்கப்பட்டுள்ளது. உண்மையில் அவர்களுக்கு அங்கு எவ்வித உரிமையுமில்லை என்பதனை நாம் தெளிவாக உணர வேண்டும்.
நாங்கள் யூதர்களிடமிருந்து அக்ஸாவை பொறுப்பு எடுக்கவுமில்லை பறித்தெடுக்கவுமில்லை. அவர்கள் நம்பும் ஹைகலை நாம் இடிக்கவுமில்லை. அவர்களை நாம் விரட்டவுமில்லை மாற்றமாக அவர்களுக்கு அடைக்களம் கொடுத்து அரவனைத்த பாவத்தைத்தான் நாம் செய்துள்ளோம்.

வட தென் பலஸ்தீன்களை நிலத்தொடர்பற்ற முறையில் சில நூற்றாண்டுகள் அவர்கள் ஆட்சிசெய்தது உண்மையே. ஆனால் கி.மு 486 இல் யூத நாட்டை பாபிலோனியர் அகற்றியிருந்தனர். கி.பி 135 களிலிருந்து ரோமானியர்கள் யூதர்களை வெளியேற்றியிருந்தனர். 25 நூற்றாண்டுகளாக யூத பிரவேசம் அங்கு காணப்படவில்லை. 30 நூற்றாண்டுகளாக கன்ஆனியர் வாழ்ந்த பூமி அது. கன்ஆனியர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்கள்.  14 நூற்றாண்டுகளாக முஸ்லிம்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த பூமி அது. இடையில் கிறிஸ்தவர்களிடம் இழந்ததை  ஸலாஹுத்தீன் ஐயூபி மீட்டெடுத்தார். கொலை,கொள்ளை,வன்முறை முலம்தான் யூதர்கள் இதனை ஆக்கிரமித்தார்கள்.

இன்று அவர்கள் நினைத்த பிரகாரம் அக்ஸாவை இயக்க அனுமதிக்கலாமா? தாம் நினைத்தவர்களையெல்லாம் நினைத்த நேரத்தில் இப் புணித பூமியில் பிரவேசிக்க அனுமதிக்கலாமா? முஸ்லிம்களின் உரிமையை பறித்தெடுத்து முஸ்லிம்களையே தடுப்பதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

எமது கடமை என்ன?
இத்தகைய பிரச்சினையின் முன்னால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் மிகவும் பிரதானமானது. இப்பிரச்சினைக்காக நாம் குறைந்த அளவில் துஆ செய்ய முடியும் மேலதிகமாக இப்பிரச்சினையை மக்கள் மயப்படுத்தலாம்.

எமக்கிடையில் பல கட்சிகள், இயக்கங்கள், ஜமாஅத்துகள், தரீக்காக்கள் இருக்கின்றன. இவை அனைத்திற்கிடையிலும் வித்தியாசமான கருத்துப்போக்குகள் காணப்படுகின்றன. ஆனால் இவற்றை புறத்தொதுக்கி இணைந்து செயல்படவேண்டிய பாரிய பிரச்சினைகளும் எம்மிடையே உள்ளன. அத்தகைய ஒரு பிரச்சினைதான் மஸ்ஜித் அக்ஸா விவகாரம்.இவ்விடயத்திலேனும் நாம் ஒரே கருத்தில் இணைய முடியாவிட்டால்  எதுதான் எம்மை இணைக்கப்போகின்றது.

எமது பிரச்சினைகளின் மையம் மஸ்ஜித் அக்ஸாவில்தான் மையம்கொண்டுள்ளது. யூதர்களுக்கிடையில் பல பிரச்சினைகள் காணப்பட்டபோதும் ஹைகல் அவர்களை இணைத்துள்ளது. யூதர்கள் இருவர் சந்தித்தால் ஹைகலைபற்றி வினவிக்கொள்வார்கள். ஆனால் நாம் எமது அக்ஸாவை மறந்துவிட்டோம். இரண்டாம்தர பிரச்சினைகளின ஆழத்தில் நாம் மூழ்கிவிட்டோம்.
எரிக்கப்பட்ட மஸ்ஜித் அக்ஸா நினைவுகளும் கடமைகளும். #aqsa எரிக்கப்பட்ட மஸ்ஜித் அக்ஸா நினைவுகளும் கடமைகளும். #aqsa Reviewed by Madawala News on 8/17/2016 10:49:00 AM Rating: 5