வீதி­களில் உலா­வந்­த­வாறு கஞ்சா விற்­ப­னை செய்தவர் ஏறாவூர் பொலிஸாரிடம் பிடிபட்டார்.. #arrest



கஞ்­சா­வுடன் வீதியில் நட­மா­டிய 30 வய­தான குடும்­பஸ்தர் ஒரு­வரை நேற்று ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விற்­ப­னைக்­காக தம்­வசம் கஞ்சா வைத்­தி­ருந்­த­ இந்த நபர் ஏறாவூர் பொலிஸ் பிரி­வி­லுள்ள கொம்­மா­துறை பிர­தா­ன ­வீ­தியில் வைத்தே கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

குறித்த சந்­தேக நப­ரி­ட­மி­ருந்து 5300 மில்­லி­கிராம் கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

குறித்த நபர் வீதி­களில் உலா­வந்­த­வாறு கஞ்சா விற்­ப­னையில் ஈடு­ப­டு­வ­தாக பொது­மக்­க­ளி­ட­மி­ருந்து கிடைத்த தகவலுக்கமையவே பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.

இச்­சம்­பவம் தொடர்­பான விசா­ர­ணை­களை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
வீதி­களில் உலா­வந்­த­வாறு கஞ்சா விற்­ப­னை செய்தவர் ஏறாவூர் பொலிஸாரிடம் பிடிபட்டார்.. #arrest வீதி­களில் உலா­வந்­த­வாறு கஞ்சா விற்­ப­னை செய்தவர் ஏறாவூர் பொலிஸாரிடம் பிடிபட்டார்.. #arrest Reviewed by Madawala News on 8/08/2016 10:32:00 AM Rating: 5