Free Space

கண்டி, மடவளை ஹில்கன்ட்றி பாலர் பாடசாலையின் Arts & Crafts கண்காட்சி. (படங்கள்)



மடவளை ஹில்கன்ட்றி பாலர் பாடசாலையிலே; ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக பாடசாலையினால் கல்லூரி அதிபர் ஜனாப்  A.A.M ஜாஸில் அவர்களின் தலைமையின் கீழ் கண்காட்சி நிகழ்வொன்று நடாத்தப்பட்டது.

இக் காண்காட்சியிலே மாணவர்களின் திறமைகளை வெளிக் கொண்டு வரும் முகமாக  அவர்களால் உருவாக்கப்பட்ட பல வகையான கைப்பணிப் பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்தோடு மாணவர்களுக்கு பயன் தரக் கூடிய பல புத்தகங்களும் அத்தினத்திலே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

இக் கண்காட்சிக்கு பிரதம அதிதியாக; திருமதி G.F.Shihana.A.Raheem B.com.(Hon), S.L.E.A.S  (Principal of Badi - Ud- Din Mahmud Girls’ College,Kandy) அவர்கள் சமூகமளித்தார்.

இக்கண்காட்சிக்கு பெருந்தொகையான மாணவர்களும் பெற்றோர்களும் வருகைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




கண்டி, மடவளை ஹில்கன்ட்றி பாலர் பாடசாலையின் Arts & Crafts கண்காட்சி. (படங்கள்) கண்டி, மடவளை ஹில்கன்ட்றி பாலர் பாடசாலையின் Arts & Crafts கண்காட்சி. (படங்கள்) Reviewed by Madawala News on 8/16/2016 01:34:00 PM Rating: 5