Oceas

பிஸ்டல் குழுவினால் உன்னை சுட்டுக் கொல்வோம்.



தமிழ் விடுதலை கத்தோலிக்க பேரவை என்ற அமைப்பு தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக இந்து சம்மேளனத்தின் தலைவர் என். அருண்காந்தன் தெரிவித்துள்ளார்.

தொலைபேசியில் இனந்தெரியாத நபர் இந்த கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளதாகவும் பௌத்த, இந்து ஒன்றியத்தை ஏற்படுத்த வடக்கிற்கு வேண்டாம் எனவும் அப்படி வந்தால், தமது பிஸ்டல் குழுவினால் சுட்டுக் கொல்வோம் என மிரட்டியதாகவும் அருண்காந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஏ.9 வீதியில், கிளிநொச்சி கனகராயன்குளம் காளியம்மன் கோயிலில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை இந்த அமைப்பினரே நேற்று முன்தினம் இரவு உடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் வடக்கு, கிழக்கு உட்பட தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் மத ரீதியான பிளவுகளை ஏற்படுத்த சில சக்திகள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சைவ மற்றும் கிறிஸ்தவ தமிழ் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும் வகையில் சிலர் செயற்பட்டு வருவதாகவும் பேசப்படுகிறது.
பிஸ்டல் குழுவினால் உன்னை சுட்டுக் கொல்வோம். பிஸ்டல் குழுவினால் உன்னை சுட்டுக் கொல்வோம். Reviewed by Madawala News on 8/31/2016 02:08:00 PM Rating: 5