Ad Space Available here

கண்டி ஹட்டன் நெஷனல் ATM பணம் 65 இலட்சத்தை சுருட்டியவர் கொழும்பில் எதேச்சையாக சிக்கிய சம்பவம்.கண்டி வர்த்­தக மைய கட்­டட தொகு­தியில் அமைந்­துள்ள ஹட்டன் நெஷனல் வங்­கியில் பணம் மீளப்­பெறும் தானி­யங்கி இயந்­தி­ரத்­திற்கு இடு­வ­ தற்­காக எடுத்துச் செல்­லப்­பட்ட 65இலட்சம் ரூபா பணத்­தினை திருடிச் சென்ற நபர் கொழும்பு கிராண்ட்பாஸ் பகு­தியில் வைத்து
கையும் கள­வு­மாக பிடிக்­கப்­பட்­டுள்ளார்.

அனு­ரா­த­புரம் எப்­பா­வலை பகு­தியை சேர்ந்த அதி­காரி என்ற நபரே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

நேற்று அதி­காலை 3 மணி­ய­ளவில் இவர் கொழும்பு கிராண்ட்பாஸ் ஸ்டேஸ் வீதியில் அமைந்­துள்ள பால­மொன்­றுக்கு அரு­மை­கா­மையில் வைத்து கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக கிராண்பாஸ் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஏ.எஸ்.பி.ரசல் சொய்ஸா தெரி­வித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஹட்டன் நெஷனல் வங்­கிக்கு சொந்­த­மான 80 கோடி ரூபாய் பணத்­தினை எடுத்துச் சென்று அவ்­வங்­கியின் கிளை­களில் உள்ள பணம் மீளப்­பெறும் தானி­யங்கி இயந்­தி­ரங்­களில் இடும் செயற்­பாடு தனியார் நிறு­வ­னத்­திடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

அதற்­க­மைய குறித்த வங்­கியின் கண்டி வர்த்­தக மைய கட்­டி­டத்­தொ­கு­தியில் அமைந்­துள்ள கிளையின் பணம் மீளப்­பெறும் தானி­யக்க இயந்­தி­ரத்­திற்கு இடு­வ­தற்­காக அந்த நிறு­வ­னத்­திற்கு சொந்­த­மான வாக­ன­மொன்றில் நேற்று முன்­தினம் பணம் எடுத்துச் செல்­லப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அதி­காரி எனும் குறித்த வாகன சாரதி ஹட்டன் நெஷனல் வங்­கியின் அதி­கா­ரிகள் நால்­வ­ருடன் பணத்தை எடுத்­துக்­கொண்டு கண்டி வர்த்­தக மையக்­கட்­டிட தொகு­தியின் வாகன தரிப்­பி­டத்­திற்கு சென்­றுள்­ளனர்.

வர்த்­தக கட்­டிட தொகு­தியின் ஹட்டன் நெஷனல் வங்கி பணம் மீளப்­பெறும் இயந்­தி­ரத்­திற்கு பணம் வைப்புச் செய்ய தேவை­யான பணம் தவிர்ந்த ஏனைய தொகையினை வாகன சார­தியின் பாது­காப்பில் விடுத்து அதிகாரிகள் சென்­றுள்­ளனர்.

அத்­த­ரு­ணத்தில் தனது பாது­காப்பில் விடுத்துச் செல்­லப்­பட்ட பணப் பெட்­டி­யி­லி­ருந்து 65 இலட்சம் ரூபா பணத்­தினை குறித்த வாகன சாரதி காரின் பற்­ற­ரி பகுதிக்குள் மறைத்து வைத்­துள்ளார்.

அந்­நே­ரத்தில் வர்த்­தக கட்­டிட தொகு­தியின் ஹட்டன் நெஷனல் வங்­கியின் திகனை கிளைக்கு இட­வேண்­டிய பணத்­தொ­கை­யினை தாம் கொழும்பு தலைமை அலு­வ­ல­கத்தில் மறந்து வைத்­து­விட்டு வந்­தி­ருக்­கலாம் என்ற சந்­தே­கத்தின் பேரில் அதிகாரிகள் மீண்டும் தலைமை அலு­வ­ல­கத்­திற்கு திரும்­பி­யுள்­ளனர்.

இதற்கு முன்னர் தலைமை அலு­வ­ல­கத்தில் பணத்­தினை மறந்து விட்டுச் சென்ற சந்­தர்ப்­பங்கள் இருந்­துள்­ள­மை­யி­னா­லேயே வங்­கியின் அதி­கா­ரிகள் மறைக்­கப்­பட்ட பணம் தொடர்பில் பெரிதும் அவ­தானம் செலுத்­தாமல் தலைமை அலு­வ­ல­கத்­திற்கு மீளத்­தி­ரும்­பி­யுள்­ளனர்.

இவ்­வா­றான நிலையில் குறித்த நபர் கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள வாகன தரிப்­பி­டத்தில் காரினை தரித்­து­விட்டு தான் மறைத்து வைத்த பணத்­தினை எடுத்­துக்­கொண்டு தனது வீடு நோக்கி புறப்­பட்டுச் சென்­றுள்ளார்.

அந்த சம­யத்தில் அவர் தனது மோட்டார் வண்­டியில் முற்­றாக முகத்­தினை மூடிய தலைக்­க­வசம் ஒன்­றினை அணிந்­து கொண்டு ஒரு­கொ­ட­வத்தை பாலம் ஊடாக பய­ணித்­துள்ளார்.

அவ்­வி­டத்தில் அவரை சந்­தே­கத்தின் பேரில் மடக்­கிப்­பி­டித்த பொலிஸார் அவ­ரி­டத்தில் மேற்­கொண்ட விசா­ர­ணை­களின் போது நடந்­த­வற்றை கூறினார்.
அதன்­போது பணத்­துடன் பொலிஸ் கான்ஸ்­டபிள் கிருஷ்­ண­மூர்த்தி  (இல 88685) என்ற அதி­கா­ரி­யினால் கையும் கள­வு­மாக பிடிக்­கப்­பட்ட குறித்த சாரதி நாளைய தினம் நீதி­மன்றத்தில் ஆஜர்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாக உள்­ளாத தெரி­வித்தார்.


அதே­நேரம் குறித்த நபரை மடக்­கிப்­பி­டித்த பொலிஸ் கான்ஸடபிள் கிருஷ்­ண­மூர்த்தி  தெரி­விக்­கையில்,

பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பதி­ய­நா­யக,சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லயனல் குணத்­தி­லக, கிராண்பாஸ் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஏ.எஸ்.பி.ரசல் சொய்ஸா ஆகி­யோரின் பணிப்­பு­ரையின் கீழ் கிராண்ட்பாஸ் ஸ்டேஸ் வீதியில் பாது­காப்பு கட­மை­களில் ஈடு­ப­டுத்­தப்பட்­டி­ருந்த போதே குறித்த நபர் மடக்கிப் பிடிக்­கப்­பட்டார்.

அண்­மையில் கண்டி பிலி­மத்­த­லாவை பகு­தியில் எனது நண்பர் ஒருவர் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் வகையில் முக­மூடி அணிந்­துக்­கொண்டு மோட்டார் வண்­டியில் வந்த நபர் ஒரு­வரின் துப்­பாக்கிச் சூட்­டுக்கு இலக்­காகி உயி­ரி­ழந்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் அது தொடர்­பி­லான சிந்­த­னை க­ளுடன் பாது­காப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்த போது குறித்த நபர் முழு­தாக முகத்தை மறைக்கும் முக­மூ­டியை அணிந்­துக்­கொண்டு வருகை தந்தார். அதனால் அவரை சந்­தே­கத்தின் பேரில் மறித்து விசாரணை செய்தபோது அவரிடத்தில் இருந்த பணத்தில் 45 இலட்சம் ரூபாவினை எனக்கு லஞ்சமாக தருவதாகவும் தனக்கு 20 இலட்சத்தினை மாத்திரம் தந்து விட்டுவிடுமாறும் கோரினார்.

அவரின் கோரிக்கையை மறுத்து பொலிஸ் நிலையத்தில் அவரை ஒப்படைத்தேன்.

எவ்வாறாயினும் சந்தேக நபரை கைது செய்தற்கு முன்னதாகவே அவர் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை தனது தேவைகளுக்காக செலவிட்டிருந்தார் என தெரிவித்தார்.
கண்டி ஹட்டன் நெஷனல் ATM பணம் 65 இலட்சத்தை சுருட்டியவர் கொழும்பில் எதேச்சையாக சிக்கிய சம்பவம். கண்டி ஹட்டன் நெஷனல் ATM பணம் 65 இலட்சத்தை சுருட்டியவர் கொழும்பில் எதேச்சையாக சிக்கிய சம்பவம். Reviewed by Madawala News on 8/31/2016 11:11:00 AM Rating: 5