Accaddemy

( Audio இணைப்பு) ஞானசார தேரர் உரை நிகழ்த்த இருப்பதால் பதட்டமடைந்த முஸ்லிம் கிராமம்.. தற்போதைய நிலை பற்றிய விபரம் இதோ.



-அப்துல் ரஹீம்-

இன்று பொதுபல சேனாவின் ஞானசார தேரர் உரை நிகழ்த்தும் குருநாகல் மாவட்ட மும்மன்ன பிரதேசத்தில் பதட்ட நிலை ஏற்படலாம் என பிரதேச பள்ளிவாயல் நிர்வாகிகள் அறிவித்ததை அடுத்து,

முஸ்லிம்  காங்கிரஸ் தலைவர் கௌரவ ரவுப் ஹக்கீம் குருநாகல் மாவட்ட மும்மன்ன பிரதேசத்துக்கு உடனடியாக விசேட அதிரடி படை பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை  வேண்டியதுக்கு  அமைவாக பாதுக்காப்பு அமைச்சினால் உடனடியாக  விசேட அதிரடி படை அனுப்பிவைப்பு. அத்துடன்   நிலைமைகளை உடனுக்குடன்  தெரியப்படுத்த  முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர் சட்டதரணி  ரிஸ்வி ஜவஹர்ஷா அவரக்ளையும் களத்துக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் , அவர்கள்  தற்போது எலபடகம பிரதேசத்திலிருந்து தகவல்களை முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவருக்கு அறிவித்துக்கொண்டு இருப்பதாக அங்கிருக்கும் முஸ்லிம் காங்கிரசின் மாகாணசபை உறுப்பினர் சட்டதரணி  ரிஸ்வி ஜவஹர்ஷா எம்மிடம் தெரிவித்தார்.

குறிப்பிட்ட சம்பவங்களின் தற்போதைய நிலை தொடர்பில் களத்தில் இருந்து அவர் எமக்கு வழங்கிய செவ்வியை கீழ்வரும் வீடியோவில் கேட்கலாம்..

பிந்திக் கிடைத்த தகவல்களின் படி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வேண்டுகோளில் சுமார் 50 STF அதிரடிப்படையினர் களத்தில் இறங்க தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.



( Audio இணைப்பு) ஞானசார தேரர் உரை நிகழ்த்த இருப்பதால் பதட்டமடைந்த முஸ்லிம் கிராமம்.. தற்போதைய நிலை பற்றிய விபரம் இதோ. ( Audio இணைப்பு) ஞானசார தேரர் உரை நிகழ்த்த இருப்பதால் பதட்டமடைந்த முஸ்லிம் கிராமம்.. தற்போதைய நிலை பற்றிய விபரம் இதோ. Reviewed by Madawala News on 8/10/2016 02:58:00 PM Rating: 5