Oceas

எமது நாட்டை வளப்படுத்த பேச்சுக்களாலும், விளம்பரத்தாலும் முடியாது.



-ஜே.எம்.ஹபீஸ்-

ஒரு பொருளை மெருகூட்டுவதால் அதன் பெறுமதி கூடுகிற்து. காட்டில் எரியப்பட்ட தேங்காய் சிரட்டை ஐந்து சதம் பெறுமதியற்றது.அதனை துப்பரவு செய்து அலங்காரப்பொருள் ஒன்று செய்தால் அதன் பெறுமதி அதிகமாகும். அது போல் எமது வாழ்க்கையையும் நாம் மெருகூட்டவேண்டும், கோவில்களில் தெய்வத்திற்கு தேங்காய் உடைப்பதை விட சம்பந்தப்பட்டவர்களது தலையில் அந்தத்; தேங்காயால் அடிப்பது சிறந்தது. ஏனெனில் அதனால் அவர்களது சிந்தனையாவது உருவாகும் என அருட்தந்தை ஜெபனேசன் தெரிவித்தார்.

கண்டி, முல்கம்பல வீதியில் அமைந்துள்ள மாதர் அபிவிருத்தி மத்திய நிலையத்தின் 30 வது வருட பூர்த்தி வைபவத்தை முன்னிட்டு இடம் பெற்ற விழாவிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். (31.7.2016)
அவர் மேலும் தெரிவித்ததாவது-

குடும்ப அலகுகள் இன்று சிதைவடைந்து விட்டன. அவை மீள்கட்டமைக்கப்பட வேண்டும். குடும்ப அங்கத்தவர்களுக்கிடையில் புரிந்துணர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.

நாம் ஏதும் புதிதாக ஒரு கைத் தொழிலை மேற்கொள்ள வேண்டும். அதேநேரம் தாம் மேற்கொள்ளும் எத்துறையானாலும் அதற்கு ஒரு பூரணத்துவமான முற்றுப் பெறுதல் (பினிசிங்)இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அதற்கு ஒரு பெறுமதி கிடைக்கும்.

சதாரணமாக ஒரு தேங்காய் சிரட்டையை எடுத்துக் கொண்டால் அதற்கு எதுவித பெறுமதியும் கிடையாது. ஆனால் அதனை ஒரு அகப்பையாக வவெமைத்தால் அதற்கு ஒரு சிறிய பெறுமானம் கிடைக்ககும். ஆதனை விட அதனை மெருகூட்டி அலங்காரப் பொருள் ஒன்று செய்தால் அதன் பெறுமதி இன்னும் பல மடங்காகும். ஆதன் பினிசிங் அல்லது முடிவு உயர்தரத்தில் இருக்குமாயின் அதன் அந்தஸ்து வேறாகும். இதற்கு உதாரணமாக சிரட்டையால் செய்யப்பட்ட ஒரு அழங்காரப் பொருளை அவர் கையுடன் கொண்டு வந்திருந்தார்.  அதனை காட்டிப் பேசினார்.

அதே சிரட்டையை கொண்ட தேங்காயை தெய்வத்தின் முன் உடைத்து தண்டு துண்டுடாகவும் மாற்றலாம். ஆதனால் யாருக்கும் பயன் இல்லை. அதே தேங்காணை சம்பந்தப்பட்டவர் தலையில் அடித்தால்அவருக்கு ஏதாவது சிந்தனையாவது உதயமாகும்.  எமது நாட்டை வளப்படுத்த பேச்சுக்களாலும், விளம்பரத்தாலும் முடியாது. எமது உள்ளத்திலிருந்து அது உதயமாக வேண்டும் என்றும் கூறினார்.
எமது நாட்டை வளப்படுத்த பேச்சுக்களாலும், விளம்பரத்தாலும் முடியாது. எமது நாட்டை வளப்படுத்த பேச்சுக்களாலும், விளம்பரத்தாலும் முடியாது. Reviewed by Madawala News on 8/01/2016 08:08:00 AM Rating: 5