Free Space

கொலன்னாவையை கட்டியெழுப்ப ஐந்தாண்டு திட்டம்...


மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் போதைவஸ்து தலைமையகமாக விளங்கிய கொலன்னாவையை அடுத்துவரும் ஐந்து வருட காலத்தில் அபிவிருத்தி மூலம் கட்டியெழுப்புவேன் என கொழும்பு மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

ஒருகொடவத்த லோலெவல் வீதி அபிவிருத்தியின் நான்காம் கட்ட நஷ்டஈடு வழங்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இந்நிகழ்வின் போது 190 பேருக்கு 300 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

கொலன்னாவையைத் துரித அபிவிருத்தி செய்வதாயின் இரண்டு பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். ஒன்று பலாத்காரமாக இங்கு திணிக்கப்பட்டிருக்கும் போதைவஸ்து பிரச்சினை மற்றது லோலெவல் வீதியை அபிவிருத்தி செய்தல்.

இந்த வீதியை நான்கு மார்க்கங்கள் கொண்ட பாதையாக மாற்றும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

இதன்மூலம் கொலன்னாவைப் பிரதேசத்தின் அடிப்படை வசதிகள் முன்னேற்றமடையும். அடிப்படை வசதிகள் மூலம் இப்பகுதிக்கு முதலீட்டாளர்கள் வருவார்கள். இதன்மூலம் பெருமளவு தொழில்களைப் பெற்றுக்கொடுக்க முடியும். இதனால் மக்களிடையே பணப்புழக்கமும் அதிகமாகும். 

மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் கொலன்னாவையில் எந்தவித அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இப்பிரதேசத்தின் போதை எம்.பி அபிவிருத்தி பற்றி சிந்திக்கவில்லை.

அவர் செய்ததெல்லாம் கொலன்னாவைக்கு போதைவஸ்து, குப்பைகூலங்களை கொண்டுவந்து சேர்த்ததாகும். இதனை மாற்றியமைப்பதற்காக நான் எமது உயிரையும் துச்சமென கருதி போராடி வருகின்றேன். கொலையும் கொள்ளையும் கடத்தல்களும் போதை வஸ்தும் நிரம்பிய கொலன்னாவையை மாற்றியமைப்பதென்பது இலேசான காரியமல்ல.அதனைத் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். எனினும் துணிகரமாக இதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளேன் என்று அவர் மேலும் தெரிவித்தார். 
கொலன்னாவையை கட்டியெழுப்ப ஐந்தாண்டு திட்டம்... கொலன்னாவையை கட்டியெழுப்ப ஐந்தாண்டு திட்டம்... Reviewed by Madawala News on 8/02/2016 09:58:00 PM Rating: 5