Accaddemy

மீண்டும் பாராளுமன்றம் செல்லும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்...



சுதந்திர கூட்டமைப்பு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சர் பௌசியை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா செய்து அவரை மேல் மாகாண ஆளுநராக நியமிக்கவும்  அவரது பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு முன்னாள் அமைச்சர் எ.எல்.எம் அதாவுல்லாஹ்வை நியமிக்கவும் சுதந்திர கட்சி தலைமை திட்டமிட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மே தின கொண்டாட்டங்களின் பின்னர் சுதந்திர கூட்டமைப்பின் கூட்டணி கட்சியான தேசிய காங்கிரசுக்கு  மாவட்ட இணைத்தலைவர்,கிழக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகள் தொடர்சியாக பெற்றுக்கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இரு கட்சிகளுக்கு இடையேயான பிணைப்பு உறுதியானதின் பின்னணியிலே இந்த நகர்வு சுதந்திர கட்சியினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் தேசிய காங்கிரஸ் முக்கியஸ்தர் ஒருவரை மடவளை நியுஸ் தொடர்புகொண்டு கேட்டபோது ..

தொடர்ச்சியாக சுதந்திர கட்சியுடன் பிணைப்பினை கொண்டுள்ள தேசிய காங்கிரஸ் இது தொடர்பில்  எதுவித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை என குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பில் சுதந்திர கூட்டமைப்பு தலைமை உத்தியோகபூர்வமாக ஏதும்  அறிவிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது என அண்மைக்காலங்களில் விமர்சனங்கள் வெளியிடப்பட்ட  போதும் கடந்த மே தின கொண்டாங்களின் பின்னர் தேசிய காங்கிரசின் கை கூட்டணிக்குள் ஓங்கி வருவதை தெளிவாக அவதானிக்க முடிகிறது.

அசாத் சாலிக்கு அமைச்சர் பௌசியின் தேசியபட்டியல் ஆசனத்தை தருவதாக சுதந்திர கட்சி தலைமை வாக்குறுதி அளித்திருந்ததாகவும் அதனை பெற்றுக்கொள்ளவே அவர் தனது ஐக்கிய தேசிய கட்சி மாகாண சபை உறுப்பினர் பதவியை  ராஜினாமா செய்ததாகவும் அவரது தரப்புகள் கூறிவந்த  நிலையில் 

அக்கரைபற்று நகர சபை , கிழக்கு மாகாண சபையில் மூன்று மகாண சபை உறுப்பினர்கள் ( கிழக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் பதவி உற்பட) பலமான வாக்கு வங்கியை வைத்துள்ள தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் விரைவில் பாராளுமன்றத்துக்கு உள்வாங்கப்படுவார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

 

மீண்டும் பாராளுமன்றம் செல்லும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்... மீண்டும் பாராளுமன்றம் செல்லும்  முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்... Reviewed by Madawala News on 8/12/2016 11:46:00 PM Rating: 5