Accaddemy

இஸ்லாம் குறித்த தவறான பிரசாரத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்


-ARA FAREEL-
இஸ்லாம் சமா­தா­னத்­துக்கும் சக­வாழ்­வுக்­கு­மான ஓர் மார்க்­க­மாகும். ஆனால் இன்று இஸ்லாம் ஒரு தீவி­ர­வாத மார்க்­க­மென தீவி­ர­வா­தத்தைப் போதிப்­ப­தாக உல­க­கெங்கும் பரப்­பட்டு வரு­கி­றது.

இதற்கு எதி­ராக மேற்­கொள்ள வேண்டிய நட­வ­டிக்­கைகள் குறித்து உலக முஸ்லிம் லீக்கின் இந்த சர்­வே­தச மாநாட்டில் சிறந்த ஆலோ­ச­னைகள் முன்­வைக்­கப்­பட வேண்டும் என முஸ்லிம் சமய விவ­கார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார். 

நேற்­றுக்­காலை அல­ரி­மா­ளி­கையில் ஆரம்­பித்து வைக்­கப்­பட்ட சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது சர்­வ­தேச இஸ்­லா­மிய மாநாட்டி தொனிப்­பொருள் சமா­தான சக­வாழ்வு என்­ப­தாக இருக்­கி­றது. உலக முஸ்லிம் லீக்கின் இலக்கும் முஸ்­லிம்­களின் இலக்கும் சக­வாழ்­வுக்­கான எதிர்­பார்ப்­பு­க­ளு­மாகும்.

இன்று உலகில் பல பிரச்­சி­னைகள் நில­வு­கின்­றன. சமயம், இனம் மற்றும் மொழியை அடிப்­ப­டை­யாகக் கொண்டு ஆயுதப் போராட்­டங்கள் நடாத்­தப்­ப­டு­கின்­றன. ஆனால் அனைத்து சம­யங்­களும் சமா­தா­னத்­தையும் சக­வாழ்­வை­யுமே போதித்­துள்­ளன.

குறிப்­பாக இஸ்லாம் சமா­தா­னத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்ட மார்க்­க­மாகும். ஆனால் ஊட­கங்கள் இன்று இஸ்­லாத்தை தீவி­ர­வாத மார்க்கம் என தவ­றான தக­வல்­களைப் பரப்பி வரு­கின்­றன. எனவே உலக முஸ்லிம் லீக் இந்த தவ­றான கருத்­து­களை நிரா­க­ரித்து உலக மக்­களை விழிப்­பூட்ட வேண்டும். 

இலங்­கையின் சனத்­தோ­கையில் முஸ்­லிம்கள் 9 வீத­மாக சிறு­பான்­மை­யி­ன­ராக இருக்­கி­றார்கள் என்­றாலும் பெரும்­பான்­மை­யி­ன­ருடன் நூற்­றாண்டு கால­மாக நல்­லி­ணக்­கத்­துடன் ஒற்­று­மை­யா­கவே வாழ்­கி­றார்கள்.

இந்­நாட்டின் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான நல்­லி­ணக்­கத்­தையும் இலக்­காகக் கொண்டு நல்­லாட்­சியை முன்­னெ­டுத்து வரு­கி­றார்கள். 

உலக முஸ்லிம் லீக்கின் ஸ்தாப­கர்­களில் ஒரு­வ­ராக மர்ஹூம் எம்.எச்.முஹம்­மது செயற்­பட்டு இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கும் பல சேவை­களைச் செய்­துள்ளார். இலங்­கைக்­கான தலை­வ­ராக அவர் செயற்­பட்டார்.

இன்று அவரது மகன் இலங்கை இஸ்லாமிய நிலையத்தின் தலைவராக செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார். இலங்கைக்கு பல உதவிகளைச் செய்து வரும் சவூதி அரேபிய மன்னருக்கு நான் நன்றிகளைத் தெரிவிக்கிறேன் என்றார்
இஸ்லாம் குறித்த தவறான பிரசாரத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இஸ்லாம் குறித்த தவறான பிரசாரத்திற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் Reviewed by Madawala News on 8/12/2016 05:28:00 PM Rating: 5