மாகாண கல்வி திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கை ...


சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்தினுடைய திருத்தப்பட்ட பரீட்சை நேரசூசிக்கு இணங்க மாகாண முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு (தரம் 6 முதல் 9 வரை) இரண்டாம் தவணைப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ளன.

தரம் 8 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வரலாறு பாடத்திற்குரிய வினாத்தாள்  தரம் 10 மனைப்பொருளியல் உட்பட மற்றும் ஒருசில முக்கிய தரங்களுக்குரிய இரண்டாம் தவணை வினாத்தாள்களாக 2016 முதலாம் தவணைக்குரிய வினாத்தாள்களே வழங்கப்பட்டுள்ளன.

தரம் பத்துக்கான மனைப்பொருளியல் வினாத்தாளானது  முதலாம் தவணைக்காக முன்னதாக வழங்கப்பட்ட அதே வினாத்தாளை இரண்டாம் தவணை என மாத்திரம் மாற்றம் செய்து பரீட்சாத்திகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண கல்வித் திணைக்களத்தினால் பல மாதங்களுக்கு முன்பிருந்தே ஆயத்தமாகி பிரபல தனியார் அச்சகங்கள் ஊடாக அச்சிடப்பட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணைப் பரீட்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள வினாத்தாள்களிலே இப்படியான தொடர்ச்சியான  தவறுகள்  இடம்பெற்றுக் கொண்டிருக்கின.

இதேபோல் மேற்படி மாகாண கல்வித் திணைக்களத்தினால் இரண்டாம் தவணைப் பரீட்சைக்காக முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பல வினாத்தாள்கள் ஏற்கெனவே தமிழ் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள்களாகவே காணப்படுகின்றன . இது தொடர்பில் சமூக இணையதளங்களிலும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

சப்ரகமு மாகாண முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மேற்படி சமூக அநீதிகள் தொடபாக முஸ்லிம் சமூகத் தலைமைகள் உரிய கவனம் செலுத்துவார்களா என பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் மாணவர்கள்  மற்ற  பாட ஆசிரியர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தரம் 10 மனைப்பொருளியல் முதலாம் தவணை வினாத்தாள்...

தரம் 10 மனைப்பொருளியல் இரண்டாம் தவணை வினாத்தாள்...


மாகாண கல்வி திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கை ... மாகாண கல்வி திணைக்களத்தின் பொறுப்பற்ற நடவடிக்கை ... Reviewed by Madawala News on 8/03/2016 10:25:00 AM Rating: 5