ஐ எஸ் நெருக்கடியை இலங்கையும் எதிர்கொண்டுள்ளது...


ஐ.எஸ் பயங்­க­ர­வாத அச்­சு­றுத்தல் சர்­வ­தேச நாடு­க­ளுக்கு உள்­ளதைப் போலவே இலங்­கையும் அவ்­வா­றான ஒரு நெருக்­க­டியை எதிர்­கொண்­டுள்­ளது என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்றோம் என   இரா­ணுவத் தள­பதி லெப். ஜெனரல் கிரி­ஷாந்த டி சில்வா தெரி­வித்தார்.

கொழும்பு பாது­காப்பு மாநாடு தொடர்பில் நேற்று பாது­காப்பு தரப்­பினர் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­விக்­கும்­போதே இரா­ணு­வத்­த­ள­பதி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில், 

நாம் பயங்­க­ர­வாத சூழலை நன்கு அறிந்­துள்ள கார­ணத்­தினால் எமது படை­யி­ன­ருக்கு பயங்­க­ர­வாத சூழ்­நி­லைகள் நன்கு தெரிந்­துள்­ளது.  இந் நிலையில் எம்மால் இந்த அழுத்­தங்­களில் இருந்து நாட்டை பாது­காத்­துக்­கொள்ள முடியும். 

அதேபோல் யுத்தம் முடி­வுக்கு வந்­ததில் இருந்து நாம் சர்­வ­தேச நாடு­க­ளுக்கு நல்­ல­தொரு எடுத்­துக்­காட்­டாக உள்ளோம். எமது மக்கள் அமை­தி­யையும் சமா­தா­னத்­தையும் விரும்பும் நிலையில் நாட்டில் பயங்­க­ர­வாத சூழல் ஒன்று உரு­வாக்க இட­ம­ளிக்க மாட்­டார்கள் என்றார்.

அவர் ஊட­க­வி­ய­லா­ளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கும் பதி­ல­ளித்தார்.

கேள்வி:- விடு­த­லைப்­புலி முன்னாள் போரா­ளி­க­ளுக்கு விஷ ஊசி ஏற்­றப்­பட்­ட­தாக தற்­போது குற்றம் சுமத்­த­பட்டு வரு­கின்­றதே?

பதில்:- அவ்­வாறு கூறு­வது பொய்­யான கருத்­தாகும். அவ்­வா­றான எந்­த­வொரு நட­வ­டிக்­கையும் இலங்கை  இரா­ணு­வத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. விடு­த­லைப்­புலி முன்னாள் போரா­ளி­க­ளுக்கு விஷ­ஊசி ஏற்­றப்­ப­ட­வில்லை என்­பதை என்னால் உறு­தி­யாக கூற­மு­டியும்.

கேள்வி:- வடக்கில் உள்ள இரா­ணுவ முகாம்­களை அகற்றும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டுமா? அர­சாங்கம் அதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளதே?

பதில்:- அவ்­வா­றான எந்­த­வொரு தீர்­மா­னமும் எடுக்­கப்­ப­ட­வில்லை. வடக்கு கிழக்கில் மட்டும் அல்ல எந்­தப்­ப­கு­தியில் இருந்தும் இரா­ணுவ முகாம்கள் அகற்­றப்­ப­டாது. வடக்கில் உள்ள இரா­ணுவம் குறைக்­கப்­படும் என குறிப்­பிட்­டுள்ள போதிலும் முக்­கி­ய­மான முகாம்கள் எவையும் அகற்­றப்­ப­டு­வ­தாக கூற­வில்லை. அதேபோல் வடக்கில் இருந்து முகாம்­களை அகற்றும் தீர்­மா­னமும் இல்லை. தேசிய பாது­காப்பு விட­யத்தில் நாம் மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­பட்டு வரு­கின்றோம். 

கேள்வி:- வடக்கின் தற்­போ­தைய நிலை­மைகள் எவ்­வாறு உள்­ளது?

பதில்:- யுத்தம் முடி­வுக்கு வந்­ததில் இருந்து வடக்கில் பல்­வேறு சிக்­கல்கள் இருந்­தன. ஆனால் இன்று நிலை­மைகள் அவ்வாறு அல்ல. வடக்கில் இன்று அமைதியான  பகுதியாக உள்ளது.

தமிழ் மக்கள் அப்பகுதிகளில் அமைதியாக வாழ்கின்றனர். இலங்கையில் ஏனைய பகுதிகளை விடவும் வடக்கில் நிலைமைகள் சாதகமான வகையிலும் அமைதியை உறுதிப்படுத்தும் வகையிலும் உள்ளது.

 

ஐ எஸ் நெருக்கடியை இலங்கையும் எதிர்கொண்டுள்ளது... ஐ எஸ் நெருக்கடியை இலங்கையும் எதிர்கொண்டுள்ளது... Reviewed by Madawala News on 8/26/2016 12:15:00 PM Rating: 5