Oceas

தேர்தல் வாக்குறுதிகள்; வரலாறுகளை ஆரோக்கியப்படுத்துமா?


வெற்றியையும் பதவிகளையும் நிர்ணைத்துக்கொள்வதற்காக காலத்தி;ற்குக் காலம் நடைபெறும் தேர்தல்களின்போது, வாக்குறுதிகள் வழங்கப்படுவது இலங்கையின் தேர்தல் வரலாற்றின் மரபாக அமைந்துவிட்டது. ஆனால், இத்தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களிக்கிறார்களா? அல்லது கட்சி மீதும், அக்கட்சியின் கொள்கையின் மீதும், வேட்பாளர்கள் மீதும் கொண்ட பற்றின் காரணமாக  வாக்களிக்கிறார்களா? அல்லது ஆட்சியாளர்கள் மற்றும் மக்கள் பிரநிதிகளின் மீது கொண்ட அதிருப்தியின் காரணமாக அவர்களை அப்பதவிகளிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக வாக்களிக்கிறார்களா? என்பதை தேர்தல் வரலாறுகளை நோக்குகின்றபோது ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் அதன் வெளிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

அந்த வகையில், கடந்த 2015ல் நடைபெற்ற 7வது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 8வது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்; கடந்த ஆட்சியாளர்களின் செயற்பாட்டுக்கெதிராக மக்கள் அளித்த தீர்ப்பாகக் கொள்ளலாம். அதாவது, ஆட்சி மாற்றத்திற்கு  மக்கள் அளித்த ஆணை என்றும் கூறலாம்.

இவ்விரு தேர்தல்களிலும் வாக்களிப்பதற்காக ஓரு கோடியே 50 இலட்சத்து 44 ஆயிரத்து 490 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகைமை பெற்றிருந்தனர். 7வது ஜனாதிபதித் தேர்தலில் ஏறக்குறைய 62 இலட்சம் வாக்காளர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்து ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை ஜனாதிபதியாக ஆக்கியிருக்கிறார்கள்;;. அதேபோன்று, 8வது பாராளுமன்ற தேர்தலின்போது நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கு 5,098,927 வாக்காளர்கள் வாக்களித்து 106 ஆசனங்களை இக்கட்சிக்குப் பெற்றுக்கொடுத்ததன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக ஆக்கியுள்ளனர்.

இனவாதத்தையும் மதவாத்ததையும் பிரதேசவாத்தையும் தூக்கியெறிந்து இந்த நாட்டில் ஊழல். இலஞ்சம், மோசடி, அராஜகம் ஒழிக்கப்பட்டு  நீதி, நியாயம,; சமத்துவம், சகோரத்துவம் கொண்ட நல்லாட்சி ஓங்கி வளர வேண்டும். அதற்கான மாற்றம்  அவசியம் என்ற மனப்பாங்குகள் கொண்ட மக்கள் கடந்த ஆட்சியாளர்களின் தேர்தல் வாக்குறுதிகளையும்  சலுகைகளையும் கணக்கில்கொள்ளாது அவர்களுக்கு எதிராக வாக்களித்திருக்கிறார்கள் என்பதே நிதர்சனமாகும். ஆனால், மக்களின் எதிர்பார்ப்பை   இவ்வாட்யிலுள்ள சிலர் கேள்விக்குறியாக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் இடம்பெற்ற மக்கள் விரோத செயற்பாடுகளை ஒரு சிலர் இவ்வாட்சியிலும் முன்கெடுப்பது இவ்வாட்சிக்கெதிரான விமர்சனங்களை முன்னெடுக்கச் செய்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டிக்காட்டுது அவசியமாகும்.

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், இவ்வாட்சி குறித்த நம்பிக்கைத்தன்மையைக் கட்டியெழுப்புவதற்காகவும், நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கடும் பிரயத்தனங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், அவர்களின் தலைமைத்துவங்களை ஏற்று ஆட்சியில் பதவி வகின்றவர்களின் செயற்பாடுகள் மக்களை மீண்டும் சிரமங்களுக்கும், விரக்தி மனப்பான்மைக்கும் இடடுச் செல்வதாக முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்களை நிராகரிக்க முடியாது.

தேர்தல் வாக்குறுதிகள்

கடந்த ஜனாதிபதி,; பாராளுமன்றத் தேர்தல்களின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷவினால் மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் செல்லுபடியாகவில்லை. ஆனால் இவ்விரு தேர்தல்களின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க ஆகியோரினால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளை ஏற்று ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய மக்களின் எதிர்பார்ப்புக்கள் அதிகமாகவேவுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட நூறுநாள் வேலைத்திட்டமும் தேர்தல் விஞ்ஞாபனமும் அவற்றில் குறி;ப்பிடப்பட்ட வாக்குறுதிகளும் முடிந்தளவு அந்த 100 நாட்களுக்குள் நிறைவேற்றப்பட்;டிருக்கிறது. இன்னும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டியுமுள்ளது.

கடந்த பொதுத்தேர்தலின்போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பல வாக்குறுதிகள் முன்வைக்கப்பட்டன. அதியுச்ச அதிகாரப் பகிர்வுடன் ஒற்றையாட்சி முறைமையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு, 10 இலட்சம் தொழில் வாய்ப்புக்கள், 5 இலட்சம் வீடுகள், புதிய தேர்தல்முறை, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ வழிபாட்டு தலங்களின் புனரைமப்பு, தேசிய நல்லிணக்கத்துக்கான நடவடிக்கை, பெண்கள் பாதுகாப்புத் திட்டங்கள் போன்ற  பல விடயங்களை உள்ளடக்கிய நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன,; பிரதேசங்களுக்;கு ஏற்ற வகையிலும் அப்பிரதேசங்களில் வாழும் மக்களின் தேவைகளுக்கு ஏற்பவும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், தேர்தல் காலங்களின்போது யாழ்பபானத்திற்குச் சென்ற பிரதமர் அங்கும் பல வாக்குறுதிகளை வழங்கியிருந்தார்;. அநீதிகள் தொடர்பில் பொறுப்புக் கூறும் வகையில் உண்மையைக் கண்டறியும் வகையில் ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும். யுத்தத்தின்போது இடம்பெயர்ந்த சகல மக்களையும் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதியுயர் பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை மீள வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்ட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் வாழ்வாதரம் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற பல வாக்குறுதிகள் வடக்கு மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, தென்கிழக்கின் முகவெற்றிலை என வர்ணிக்கப்படும் கல்முனைக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒலுவில் பிரதேச மீன்பிடித் துறைமுகத்தை விருத்தி செய்து இப்பிராந்தியத்தில் மீன்பிடித்துறையை மேம்படுத்துவோம். கல்முனை பிரதேசத்தை நவீன நகரமாக்கும் பணியினை மேற்கொள்ளுவோம். சம்மாந்துறை உட்பட்ட பிரதேசங்ளையும் அபிவிருத்தி செய்வோம். சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை உருவாக்கித் தருவோம் போன்ற வாக்குறுதிகளையும் வழங்கியிருந்தார்.

கல்முனையில் வழங்கப்பட்ட உறுதி மொழிகளில் மிக முக்கியமாகவுள்ளதுதான் தென்கிழக்கின் முகவெற்றிலையான கல்முனை மாநகர சபை எல்லைக்குட்டபட்ட சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை உருவாக்கித் தருவோம் என்பதாகும். சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி சபையை பெறுதல் என்ற துரும்பு தேர்தல் காலங்களில் இப்பிரதேச வேட்பாளர்களின் பிரச்சாhர ஆயுதமாக கடந்த காலங்களில் பயன்படுத்தப்பட்டது, அவற்றைப் பயன்படுத்தி இப்பிரதேசத்தில் பிரதேச ஒற்றுமையை சீர்குழைத்து வெற்றிபெற நினைத்தவர்கள் இந்த முயற்சியில் தோற்றுப்போனது மாத்திரமின்றி, அரசியல் அடையாளத்தையும் இழந்துள்ளனர்.

இருப்பினும,; நல்லாட்சிக்காக மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும். அது மக்கள் எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்புக்கள் ஆரோக்கியமானதாக அமையப்பெறுவதும் அவசியமாகும். அந்தவகையில,; தென்கிழக்கின் முகவெற்றிலையான கல்முனை மக்கள் மத்தியில் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே இப்பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.

தென்கிழக்கின் முக வெற்றிலை

1987 ஆண்டு இடம்பெற்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பயனாக உருவாக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண ஆட்சியானது  தொடருமாயின் அல்லது வடக்கு கிழக்கு இணைக்கப்படுமாயின் முஸ்லிம்களுக்கான நிலத்தொடர்பற்ற அலகு ஒன்று தரப்பட வேண்டுமெனவும் இது தென்கிழக்கு அலகாக இருக்க வேண்டுமெனவும் அதன் தலைவாசலாக கல்முனை அமையப் பெறவேண்டுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் குரல் கொடுத்து வந்தார்.

இதற்கமைய மூவின மக்களும் வாழும் தென்கிழக்கின் முக வெற்றிலையான கல்முனையை தென்கிழக்கின் சிறந்த நகராக மாற்றுவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்த வேளையில் அவர் அகால மரணமானார். அதன் பின்னர் அவரின் அரசியல் பாசறையில் வளர்ந்து அவரால் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும், நிறுவனத் தலைவர்களகவும் உருவானவர்கள் அவருக்கு நன்றிக் கடன் செலுத்துவதற்காக வேண்டியாவது அவர் வரைந்த, வகுத்த இத்தென்கிழக்கின் முக வெற்றிலையின் அபிவிருத்திகளை முன்னெடுக்கவில்லை.

அவரால் பெற்றுக்கொண்ட அரசியல் அதிகாரங்ளை தங்கள் தங்களை பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கும், ஆசைகளையும் கனவுகளையும் நிறைவு செய்வதற்கும், சுகபோங்களை அனுபவிப்பதற்கும் அந்த சுகபோங்களைப் பகிர்ந்தளிப்பதற்கும் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர அல்லது பயன்படுத்திக்  கொண்டிருக்கிறார்களே தவிர, மறைந்த தலைவரின் கனவின் ஒன்றாக இருந்த இந்த முக வெற்றிலையை அபிவிருத்தி செய்து அவரின் கனவையும் ஆசையையும் செய்ய முயற்சிக்கவில்லை.

மறுபறம், கல்முனையின் அபிவிருத்திப் பணிகள் சிலவற்றை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் கல்முனையின்; அரசியல் அதிகாரத்தரப்புக்கள் அந்த முயற்சிகளை முன்னெடுக்க இடம்கொடாது தடுத்து நிறுத்தியதையும்; வேதனையுடன் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாகும். இந்த வரலாற்றோடு இணைந்ததாகவே  கல்முனையானது தென்கிழக்கின் முக வெற்றிலை என்ற பெயரைத் தன்னகத்தே தாங்கிக் கொண்டது.

கரவாகு எனும் கல்முனையின் வரலாறு.

பற்று என்பது நிர்வாகப் பிரிவு ஒன்றாகும். இப்படியான நிர்வாகப் பற்றுக்கள் பல மட்டக்களப்பகத்தில் நீண்டகாலமாக இருந்து வருகின்றன. ஒவ்வொரு பற்றுக்கும் தலைமைக் கிராமமாக இருப்பதின் பெயர்கொண்டே அப்பற்று அழைக்கப்பட்டு வருகிறது. அப்படியான பற்றுக்களில் கரவாகுப் பற்றும் ஒன்று. இப்பற்றின் தலைமைக் கிராமமே கரவாகாகும். இக்கராவகுவே இன்று கல்முனை என அழைக்கப்படுகிறது.

பிரித்தானிய ஆட்சியின்போது கல்முனை நகரை 1869ஆம் ஆண்டு ஒரு நகராகவும் 1940ஆம் ஆண்டு பட்டினசபையாகவும் பிரகடனம் செய்த பின் 1946ஆம் ஆண்டு அதன் முதலாவது தேர்தல் பிரித்தானியரின் ஆட்சியின்போது  நடைபெற்றதாக வரலாற்றின் பதிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

பிரித்தானியர் கரவாகுவை கல்முனை எனவும் அதன் எல்லையாக வடக்கே தாளவாட்டுவான் வீதிக்கும் தெற்கே கல்முனை ஸாகிறா கல்லூரி வீதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை வரைபடத்தில் கல்முனை எனக் குறித்து அதன் அந்தஸ்தை 1887ல் சனிட்டரி போட்டாக உயர்த்தினா.; இதுவே  கல்முனைப் பட்டின சபையின் எல்லையாகவும் இருந்தது.

பண்டைய கல்முனையின் நிர்வாக எல்லையானது மூன்று நிர்வாக கிராம சபைகளையும் ஒரு பட்டின சபையையும் கொண்டிருந்தது. கரவாகு வடக்கு, கரவாகு மேற்கு, கரவாகு தெற்கு மற்றும் கல்முனை பட்டின சபை என்பன அவையாகும். கரவாகு வடக்கு கிராம சபை கல்லாறு, துறைநீலாவனை, பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு கிராமங்களைக் கொண்டிருந்தது. இருப்பினும், 1960ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டம் உருவாக்கப்பட்டபோது கல்லாறும் துறைநீலாவணையும் மட்டக்களப்பு மாவட்டத்தோடு இணைக்கப்பட்டன.

கரவாகு மேற்கு கிராம சபை நற்பட்டிமுனை, மணற்சேனை, சேனக்குடியிருப்பு, துரவந்தியன்மேடு, ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாகவும். கரவாகு தெற்கு சபை சாய்ந்தமருது கிராமத்தை உள்ளடக்கியதாகவும் இருந்ததுடன், கல்முனைப் பட்டின சபையின் எல்லையானது கல்முனை சனிட்டரி போட்டின் எல்லையாக அதவாது, தாளவட்டுவான் வீதி முதல் கல்முனை ஸாகிறா வீதி வரையான பகுதிகளுக்குள் உள்ளடங்கும் கிராமங்களைக் கொண்டிருந்தமை வரலாறாகும்.

நிர்வாக பிரிப்பும் வரலாற்றுப் பதிவும்

பட்டின சபையாக இருந்த கல்முனை 1987ஆம் ஆண்டு பிரதேச சபையாக தரம் உயர்த்தப்பட்டது. இதற்கான முதலாவது தேர்தல் 1994ஆம் ஆண்டு இடம்பெற்றது. இதன் பிற்பாடு மாநகர சபையாக தரம் உயர்தப்பட்ட பின் 2006ஆம் ஆண்டு இதற்கான முதலாவது தேர்தலும் நடைபெற்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும். பிரதேச சபையாக உருவானது முதல் உள்ளுராட்சி மன்றங்கள் நிறைவடைந்துள்ள காலம் வரை இவ்வுள்ளுராட்சி மற்றத்தின் ஆட்சி அதிகாரம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசமிருந்தது. ஆனால். இம்மாநகர மக்களின் எதிர்பார்ப்புக்கள், இம்மாநகர அபிவிருத்திக்கான ஆரோக்கியமான நடவடிக்கைகள் எவை நிறைவு செய்யப்பட்டுள்ளன. எத்தகைய நடவடிக்கைகள் மக்களைத் திருப்திப்படுத்தியுள்ளது. என்ற கேள்விகள் கல்முனையின் ஒவ்வொரு பிரஜையினதும் உள்ளத்திலிருந்து எழுப்பப்படுகிறது.

வாக்குறுதிகளை வழங்கி அல்லது மக்களின் உணர்வுகளைத் தூண்டி அரசியல் அதிகாரத்தைப் பெற்றால் மாத்திரம் போதாது. மக்கள் திருப்தி காணக்கூடிய, அப்பிரதேசம் அபிவிருத்தியடைக் கூடிய திட்டங்களும் முறையாகத் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தற்போதைய கல்முனைத் தொகுதியானது 4,726 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளதுடன் 106,780 மக்கள் தொகையையும் 68,198 வாக்காளர்களையும் கொண்டுடிருக்கிறது.

கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவு, கல்முனை தமிழ் உப பிரதேச செயலகப் பிரிவு மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவு ஆகிய நிர்வாக பிரிவுகளைக் கொண்டதாக கல்முனைத் தேர்தல் தொகுதி உள்ளது.

2011ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் பிரகாரம், கல்முனை முஸ்லிம் பிரதேசப் செயலகப்பிரிவின் 29 கிராம சேவகர் பிரிவுகளும் 10,459 குடும்பங்களையும் 29,094 வாக்காளர்களையும் கொண்டுள்ளதுடன் சிங்களவர்கள் 124 பேரையும் இலங்கைத் தமிழர்கள் 66 பேரையும் இந்தியத் தமிழர் 8பேரையும்  இலங்கை முஸ்லிம்கள் 44,306 பேரையுமாக 44,509 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

கல்முனை தமிழ் உப பிரதேச செயலகப் பிரிவின் 29 கிராம சேவகர்  பிரிவுகளும் 7,533 குடும்பங்களையும் 20,099 வாக்காளர்களையும் கொண்டுள்ளதுடன், 231 சிங்களவர்களையும்  26,564 இலங்கைத் தமிழர்களையும், 50 இந்தியத் தமிழர்களையும் 2376 இலங்கை முஸ்லிம்களையும் உள்ளடக்கியதாக 29,713 மொத்த மக்கள் தொகையைக் கொண்டுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலப்பிரிவின் 17 கிராம சேவகர் பிரிவுகளும் 6,081 குடும்பங்களையும் 16,936 வாக்காளர்களையும் கொண்டுள்ளதுடன் 25,389 முஸ்லிம்களை உள்ளடக்கிய 25,412 மக்கள் தொகையை கொண்டுள்ளது.

இவ்வாறான நிலையில், கல்முனைத் தேர்தல் தொகுதியிலுள்ள கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பிரதேசங்களை உள்ளடக்கிய  உள்ளுராட்சி சபைகள்; பிரிக்கப்பட வேண்டும் என்ற கோஷங்களும் கோரிக்கைகளும் வலுப்பெற்றுள்ளன. அரசியல் நலன்களும் இன்னும் பல காரணங்களும் இப்பிரிப்புக்களுக்கான கோஷங்களை வலுப்படுத்தியுள்ளன.

கல்முனையைப் பொறுத்த வரையில் மிக நீண்டகாலமாக இப்பிராந்தியத்தில் வாழும் மூவின மக்களும் ஒரு சில மனக் கசப்புக்கள் இருந்தாலும், ஒற்றுமையுடன் வாழ்வதைக் காணலாம். அதேபோன்று பிரதேசங்களுக்;கிடையிலும் பரஸ்பர உறவுகள் நிலைத்திருக்கிறது.

தத்தமது அரசியல் செல்வாக்குளை, அதிகாரங்களை தத்தமது பிரதேசங்களில் நிலைநிறுத்திக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் இன ரீதியாக பாடசாலைகளையும், நிர்வாகங்களையும் பிரிக்க முற்பட்டமையானது இனத்துவ ரீதியாகவும் பிரதேசவாரியாவும் மக்களைச் சிந்திக்கத் தூண்டியது வரலாறாகும். அந்த வரலாற்றுத் தவறுகளினால்தான் தற்போது ஒன்றாகவிருந்த கல்முனை மாநகர சபையையும் இன மற்றும் பிரதேச ரீதியாகப் பிரிப்பதற்கான கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ள அதற்கான முயற்சிகளும் இறுதி வடிவம் பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.

ஒவ்வொரு பிரதேச மக்களும் அவரவருக்குரிய உரிமைகளையும் சுதந்திரங்களையும் மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனுபவிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படுவது அவசியம். அவ்வாறு வாய்ப்பளிக்கப்படுகின்றபோது, அச்சந்தர்ப்பமானது பிரதேச ஒற்றுமையை சீர்குழைக்காத வகையிலும,; பிரதேச மக்களுக்கிடையே கருத்து முரண்பாடுகள,; மனக் கசப்புக்கள,; பிரதேசவாதக் கோசங்களை ஏற்படாத வகையிலும் மேற்கொள்ளப்படுவது இன்றியமையாதது.

எந்தவொரு பிரதேத்துக்கோ, இனத்திற்கோ அநீதி இழைக்கப்படாத வகையில் இந்த கல்முனைத் தேர்தல் தொகுதியின் நிர்வாக சபைகளும் அதற்கான எல்லைகளும் பிரிக்கப்படுவது அவசியமானது என்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கது. ஏனெனில,; இது ஒரு வரலாற்று பதிவுக்கான முன்னெடுப்பாகும். இந்த வரலாற்றுப் பதிவுக்கான நடவடிக்கையானது வரலாற்றுத் துரோகமாக ஒரு பிரதேசத்திற்கோ அல்லது ஒரு இனத்திற்கோ ஏற்படுத்தப்படக் கூடாது என்பதே கல்முனைப் இப்பிரதேசத்தை நேசிக்கும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

தேர்தல் வாக்குறுதியின் நிமித்தம் தென்கிழக்கின் முக வெற்றிலையான கல்முனையில் ஏற்படுத்தப்படும் உள்ளுராட்சி மன்ற சபைக்களுக்கான பிரிப்பானது, தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக மாத்திரம் அமையாது, அவ்வப்;பிரதேச மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கான நிவாரணியாக அமைதுடன் அவை ஒரு இனத்திற்கோ அல்லது ஒரு பிரதேசத்திற்கோ அநீதி இழைக்கத்தக்க வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும்; இடம்பெறக் கூடாது. கல்முனையின் வரலாறு ஆரோக்கியமாக அமைய வேண்டுமாயின் பண்டைய கல்முனையின் நிர்வாக எல்லையானது கரவாகு வடக்கு, கரவாகு மேற்கு, கரவாகு தெற்கு மற்றும் கல்முனை பட்டின சபை என எல்லைப்படுத்தப்பட்டு நிர்வாகப் பிரிப்பு மேற்கொள்ளப்பட்டதோ அவ்வாறு அமையப்பெறுமாயின் அவை கல்முனையின் வராற்றுக்கும், இன ஒற்றுமைக்கும் பிதேச புரிந்துணர்வுக்கும் வழிவகுக்கும்.

கல்முனையின் வரலாறு தெரியாக அரசியல் தலைமைகள் தங்களது கட்சிச் செல்வாக்குகளை காலூணடடுச் செய்வதற்காக, ஒரு பிரதேச மக்களின் அபிலாஷகளை மாத்திரம் நிறைவேற்றுவதற்காகச் செயற்படுவார்களாயின் அச்செயற்பாடனது கல்முனையின் ஆரோக்கியமான வரலாற்றைக்; கேள்விக்குறியாக்கி விடும்.

வரலாறுகளை ஆரோக்கியப்படுத்தி தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமென்பதே என்பதே இப்பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும். இந்த எதிர்பார்ப்பை கல்முனையின் எதிர்கால வரலாறு அதன் வரலாற்றில் பதிவு செய்து கொள்வதற்காகக் காத்திருக்கிறது.

 
தேர்தல் வாக்குறுதிகள்; வரலாறுகளை ஆரோக்கியப்படுத்துமா? தேர்தல் வாக்குறுதிகள்; வரலாறுகளை ஆரோக்கியப்படுத்துமா? Reviewed by Madawala News on 8/03/2016 12:29:00 PM Rating: 5