Free Space

கூட்டு எதிர்கட்சியுடன் கைகோர்க்க முஸ்லீம்களுக்கு தினேஷ் குனவர்தன அழைப்பு


-ARA FAREEL -
முஸ்­லிம்கள் தங்­க­ளது பொரு­ளா­தா­ரத்தை ஸ்தீரப்­ப­டுத்திக் கொண்டு இந்­நாட்டில் பாது­காப்­பாக வாழ்­வ­தற்கு இணைந்த எதிர்க்­கட்­சி­யுடன் கைகோர்க்க வேண்­டு­மென இணைந்த எதிர்க்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்­தன வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

முஸ்­லிம்கள் தங்­க­ளது பொரு­ளா­தா­ரத்தை ஸ்தீரப்­ப­டுத்திக் கொண்டு இந்­நாட்டில் பாது­காப்­பாக வாழ்­வ­தற்கு இணைந்த எதிர்க்­கட்­சி­யுடன் கைகோர்க்க வேண்­டு­மென இணைந்த எதிர்க்­கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தினேஷ் குண­வர்­தன வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

நாட்டில் மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாதம் தலை­தூக்­கி­யுள்­ளமை தொடர்பில் ஊடகவியளாலர்கள் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்...

நல்­லாட்சி என்று கூறிக்­கொள்ளும் தற்­போ­தைய அர­சாங்­கத்தின் காலத்­திலும் இன­வாதம் மேலோங்கி வரு­கி­றது.

கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்­லிம்­களின் பொரு­ளா­தா­ரத்­துக்கு உத்­த­ர­வா­த­மி­ருந்­தது. தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் பயங்­க­ர­வ­தத்­தி­லி­ருந்தும் முஸ்லிம் மக்கள் பாது­காக்­கப்­பட்­டனர்.

புலிப் பயங்­க­ர­வா­தத்தை அழித்­ததன் மூலம் முஸ்­லிம்­க­ளுக்குப் பாது­காப்பு கிடைத்­தது. இன்று முஸ்­லிம்­களின் பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது. அர­சாங்கம் விடு­தலைப் புலி ஆத­ர­வா­ளர்­க­ளுக்கே நிவா­ர­ணங்­க­ளையும் பல்­வேறு சலு­கை­ளையும் வழங்கி வரு­கி­றது.

ஜன­நா­யகம் இல்­லாமற் செய்­யப்­பட்­டுள்­ளது. மக்­களின் ஜன­நா­யக உரி­மைகள் பறிக்­கப்­பட்­டுள்­ளன. உள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்­தாது அர­சாங்கம்  வேண்­டு­மென்றே கால தாமதம் செய்து வரு­கி­றது.

ஜன­நா­ய­கத்தை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் முஸ்­லிம்கள் தமது பொரு­ளா­தா­ரத்தில் ஸ்தீரத்­தன்­மை­ய­டை­வ­தற்கும் முஸ்­லிம்கள் இணைந்த எதிர்க்­கட்­சியின் பக்கம் ஒன்­றி­ணைய வேண்டும்.

புலி­களை ஆத­ரிக்கும் இந்த அர­சாங்­கத்­தினால் ஒரு­போதும் முஸ்­லிம்­களின் பாது­காப்­பினை உறு­தி­செய்ய முடி­யாது. இணைந்த எதிர்க்­கட்­சி­யி­னா­லேயே முஸ்­லிம்கள் இந்­நாட்டில் பீதி­யின்றி வாழ்­வ­தற்கு உறுதி வழங்க முடியும்.

காணா­மல்­போனோர் அலு­வ­லகம் என்ற பெயரில் நீதி­மன்ற நட­வ­டிக்­கை­களே மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.

விசா­ர­ணை­க­ளுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.

இதனால் இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படவுள்ளார்கள். இதனால் காணாமல்போனோர் அலுவலகம் அமைப்பதற்கு இணைந்த எதிர்க்கட்சி எதிர்ப்பினைத் தெரிவிக்கிறது என்றார்.
 
கூட்டு எதிர்கட்சியுடன் கைகோர்க்க முஸ்லீம்களுக்கு தினேஷ் குனவர்தன அழைப்பு கூட்டு எதிர்கட்சியுடன் கைகோர்க்க முஸ்லீம்களுக்கு தினேஷ் குனவர்தன அழைப்பு Reviewed by Madawala News on 8/26/2016 10:09:00 AM Rating: 5