Kidny

Kidny

வரலாற்றில் முதன் முதலில் நாட்டில் மர நடுகையின் மூலம் பசுமைப் புரட்சியினை ஏற்படுத்திய அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கின்றது..


(எஸ்.அஷ்ரப்கான்)
மர நடுகை திட்டத்தினை அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்திருக்கலாம். அரசியல் கட்சி என்ற வகையில் வரலாற்றிலே முதன் முதலில் நாட்டில் மர நடுகையின் மூலம் பசுமைப் புரட்சியினை ஏற்படுத்திய அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கின்றது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கல்முனை சாய்ந்தமருது மாளிகைக்காடு மருதமுனை மற்றும் நற்பிட்டிமுனை ஆகிய பிரதேசங்களில் 'வீட்டுக்கு வீடு மரம்' வேலைத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வுகள் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் திங்கட்கிழமை (01) நடைபெற்றது.

இந்நிகழ்வுகளில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத்இ கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ. அப்துல் பஷீர் ஏ.ஆர். அமீர் ஏ.எல். முகம்மட் முஸ்தபாஇ எம்.எஸ். உமர் அலிஇ சட்டத்தரணி ஏ.எம். றகீப் ஏ.எம்.பறக்கத்துல்லா எம்.ஐ.எம்.பிர்தௌஸ்இ மாளிகைக்காடு அமைப்பாளர் எம்.எச்.எம்.இஸ்மாயில்இ முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் போராளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் அங்கு உரையாற்றுகையில்.

அரச அபிவிருத்தி வேலைத் திட்டங்களின் போதும் மனித தேவைகளுக்காகவும் மரங்கள் அழிக்கப்படுவதன் விளைவாக நாட்டில் பல்வேறுபட்ட சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு மனித சமூகம் முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனவே பயன்தரும் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம் எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருக்கின்றது.

இவ்வாறான சமூக நலத்திட்டமான மர நடுகை திட்டத்தினை அரச நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் செய்திருக்கலாம். அரசியல் கட்சி என்ற வகையில் வரலாற்றிலே முதன் முதலில் நாட்டில் மர நடுகையின் மூலம் பசுமைப் புரட்சியினை ஏற்படுத்திய அரசியல் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் காணப்படுகின்றது. எனவே குறித்த வேலைத்திட்டத்திற்கு அமைவாக இப்பிரதேச மக்கள் பயன்தரும் பல்லின மரக்கன்றுகளை வீட்டுக்கு வீடு நடுவதன் மூலம் எமது சுற்றுச் சூழல் வளம் பெறுவதற்கு வழி வகுக்க வேண்டும். 

முஸ்லிம் சமூகம் இக்கட்டான நிலையில் இருந்தபோது மறைந்த தலைவர் அஷ்ரஃப் இக்கட்சியினை உருவாக்பகுவதற்கு இப்பிராந்திய மக்கள் அனைவரும் தலைவரின் பின்னால் மிகுந்த அரப்பணிப்புடன் அணி திரண்ட வரலாறு முதல் இப்பிரதேச மக்கள் இக்கட்சியின் வளர்ச்சியிலும் உயர்ச்சியிலும் அக்கறை கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.

தனிப்பட்ட நலன்களை முன்னிறுத்தி ஒரு சிலர் இக்கட்சிக்கு எதிராக செயற்படுகின்றனர். இவ்வாறு சுயநலனுக்காக கட்சிக்கு எதிராக செயற்படுபவர்களை கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது மக்கள் முற்று முழுதாக நிராகாரித்துள்ளார்கள். ஒரு சிலர் வெறும் மாயைகளை காண்பிப்பதன் மூலம் கட்சியின் கட்டுக்கோப்பை தகர்க்க முனைகின்றனர். இவ்வாறானவர்களை இனங்கண்டு மக்கள் ஓரம் கட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது இக்கட்சி அரசின் முக்கிய பங்காளியாக அதிகாரம் மிக்க ஒரு கட்டமைப்பில் இருக்கின்றது. இதனால் பெருமளவான நிதியினை அரசு எமது தலைவர் ரவூப் ஹக்கீமின் அமைச்சுக்கு வழங்கியிருக்கின்றது. இதனூடாக இப்பிராந்தியத்திற்கு தேவையான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு நிதிகளை ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானித்திருக்கின்றோம். இது மாமூல் அபிவிருத்தியாக இல்லாமல் நீண்டகால அபிவிருத்தி வேலைத்திட்டமாக நாம் இதனை செயற்படுத்தவுள்ளோம். இதன் மூலம் இப்பிரதேச மக்கள் வேண்டி நிற்கின்ற அபிவிருத்தியினை நிறைவேற்றுவோம் எனவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

வரலாற்றில் முதன் முதலில் நாட்டில் மர நடுகையின் மூலம் பசுமைப் புரட்சியினை ஏற்படுத்திய அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கின்றது.. வரலாற்றில் முதன் முதலில் நாட்டில் மர நடுகையின் மூலம் பசுமைப் புரட்சியினை ஏற்படுத்திய அரசியல் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கின்றது.. Reviewed by Madawala News on 8/02/2016 10:55:00 PM Rating: 5