Madawala News

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சியின் பணியை சரி­யாக முன்­னெ­டுக்­க­வில்­லை !!


தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சியின் பணியை சரி­யாக முன்­னெ­டுக்­க­வில்­லை­யென ஜே.வி.பி. யின் பொதுச் செய­லாளர் ரில்வின் சில்வா குற்றம் சுமத்­தி­யுள்ளார்.  

யாழ்ப்­பா­ணத்­துக்கு விஜயம் செய்­த அவர் தமது கட்சி அலு­வ­ல­கத்தில் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்­பி­லேயே இவ்­வறு குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

அவர் தெரி­வித்­தி­ருக்கும் கருத்­துக்கள் கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்­டி­ய­வை­யாகும்.

'' வட மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பால் எவ்­வாறு வெற்­றி­க­ர­மாக முன்­னெ­டுக்க முடி­யாமல் உள்­ளதோ அதே­போன்றே பாரா­ளு­மன்­றத்­திலும் கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சியின் பணியை சரி­யாகச் செய்­ய­வில்லை.

எதிர்க்­கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு கிடைத்­த­மை­யா­னது நல்­லி­ணக்க செயற்­பாட்­டுக்கு துணை­யா­ன­தாக அமைந்­தி­ருக்கும். எனினும் இதனை அடுத்த கட்­டத்­துக்குக் கொண்­டு­ செல்­வ­தற்கு சம்­பந்தன் தவ­றி­விட்டார்.

எதிர்க் கட்­சி­யான கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்­றத்தில் எத­னையும் எதிர்க்­காது எதிலும் தலை­யீடு செய்­யாத போக்­கையே கடைப்­பி­டித்து வரு­கி­றது. எவற்­று­டனும் தொடர்­பில்­லா­த­வர்கள் போல இருக்­கின்­றனர் '' என்றும் ரில்வின் சில்வா சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அதே­போன்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு விட்ட இந்த இடைவெளியைப் பயன்­ப­டுத்தி தங்­களைப் பொது எதி­ரணி என தம்மைத் தாமே கட்­ட­மைத்­துள்ள மஹிந்த தரப்பைப் பற்­றியும் அவர் சில விட­யங்­களைக் குறிப்­பிட்­டுள்ளார்.

'' தற்­பொ­ழுது நாட்டில் ஆட்­சி­ செய்யும் நிர்­வா­கமும் சரி எதி­ர­ணியில் உள்ள மஹிந்த தரப்பும் சரி மக்­களின் பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கோ அல்­லது இன ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்கோ முயற்­சிக்­க­வில்லை.

மஹிந்த அணி­யினர் இன­வா­தத்தைத் தூண்டி இழந்த அதி­கா­ரத்தை மீளப்­பெற்றுக் கொள்­வ­தி­லேயே கூடுதல் கவனம் செலுத்­தி­யுள்­ளனர். 

மறு­பக்­கத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் தமக்கு வழங்­கிய பணியை சரி­யாகச் செய்­யாது வில­கி­யி­ருக்கும் தரப்­பாகக் காணப்­ப­டு­கின்­றனர். எனவே மக்கள் தொடர்ச்­சி­யாக தெரி­வு­ செய்­து­வரும் இவ்­வா­றான அர­சியல் சக்­தி­க­ளுக்குப் பதி­லாக மாற்று சக்­தி­யொன்­றுக்­கான தேவை ஏற்­பட்­டுள்­ளது'' என்றும் அவர் மேலும் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

ரில்வின் சில்­வாவின் இந்தக் கருத்­துக்­களில் உள்ள யதார்த்­தத்தை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் அதன் தலை­வரும் புரிந்து கொள்ள வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். ஏனெனில் எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கிடைத்த பிற்­பாடு அந்தப் பத­விக்­கு­ரிய பொறுப்­புக்­களை சரி­வரச் செய்­வ­தற்­கான முயற்­சி­களை சம்­பந்தன் மேற்­கொள்­ள­வில்லை.

இது­வரை எதிர்க்­கட்சித் தலைவர் அலு­வ­ல­கத்தில் ஒரு பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்பை நடத்­தவோ அல்­லது அதன் மூல­மாக அர­சாங்­கத்தின் குறை­களை சுட்­டிக்­காட்­ட­வோ அவர் முன்­வ­ர­வில்லை.

த.தே.கூட்­ட­மைப்பின் தலைவர் என்ற வகையில் அர­சாங்­கத்­துடன் இணக்­க­மாகச் சென்று தமிழ் மக்­க­ளுக்­கான தீர்­வு­களைப் பெற்றுக் கொடுப்­பது வேறு; எதிர்க் ­கட்சித் தலைவர் என்ற வகையில் தேசியப் பிரச்­சி­னைகள் தொடர்பில் அர­சாங்­கத்தின் நகர்­வு­களை விமர்­சிப்­பது வேறு.

ஆனால் இந்த இரண்­டுக்­கு­மி­டை­யி­ல் பிரி­கோட்டை ஏற்­ப­டுத்­தாது அர­சாங்­கத்தை சமாளித்துச் செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் செயற்படுவது இந்த அரசாங்கத்திற்கு மாத்திரமன்றி மஹிந்த அணியினருக்கும் வாய்ப்பாக மாறியுள்ளது என்பதே இந்த இடத்தில் யதார்த்தமாகும்.

ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ள விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் தனது கவனத்தை செலுத்துவார் என நம்புகிறோம்.

Madawala News

About Madawala News -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :