Kidny

Kidny

அதாஉல்லாவை அற்ப அரசியல் அதிகார வரையறைகளில் வைத்து அளவிடாதீர்கள்


சமுகத்திற்காக தனது அதிகார ஒழுங்கை தவற விட்ட ஒரு தலைமை..

-அஸ்மி அப்துக்கபூர்-

இன்று வெகுவாக பேசப்பட்டு வருகின்ற வடகிழக்கு பிரிப்பு தொடர்பிலும் முஸ்லீம் களின் இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலும் 
வடகிழக்கை பிரித்தது அதாஉல்லாஹ் இனவாதி என்கின்ற விடயத்தை ஒரு தரப்பும் 
அதாஉல்லாஹ் பிரிக்க குரல் தான் கொடுத்தார் பிர்த்தது நீதிமன்றம் என்கின்ற விடயத்தை இன்னொரு தரப்பும் வெகுவாக பேசுகின்ற சூழலில் இவ்விரு விடயங்களுக்கும் அப்பால் 
அதாஉல்லாஹ் குரல் தான் கொடுத்தார் பிரிக்க வில்லை என்கின்ற கிழக்கின் எழுச்சி காரர்கள் முற்று முழுதாக அமைச்சர் ஒருவரின் வழிகாட்டலில் மு.கா சின் இன்றைய தலைமைக்கு அன்று வலுவூட்டி இன்று அவரால் கைவிடப்பட்டவர்களினாலும் இன்னும் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன் சேரின் பங்களிப்புடன் கூறிவருகின்ற கருத்தாகும்.

கிழக்கின் எழுச்சிகாரர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை 
இணைந்த வடகிழக்கில் முஸ்லீம்களுகான சுயாட்சி நிலப்பரப்பு தொடர்பான கொள்கை தான் மு க வின் இன்று வரைக்குமான கொள்கையாகும்
மு காவினுடைய தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் இறுதியாக அவற்றையெல்லாம் தூக்கி வீசி விட்டுத்தான் தேசிய ஐக்கிய முண்ணனி யை உருவாக்கினார் என்பதும் 
பின்னர் மரமும் பாடலும் இந்த சமுகத்தின் வாக்குவாக்குகளை பெற்றுக் கொள்ள போதுமானது என இன்றைய தலைமை நம்பிக்கை கொண்டு அதேனேயே செயற்படுத்தி வருகிறது இதே போல் 
வடகிழக்கு பிரிப்பு தொடர்பில் உங்களுடைய தேசியத்தின் தந்தை அவர்களால் சென்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட தேசிய வாதிகள் இயக்கம் வெளியிட்ட "முஸ்லீம் சுயாட்சி "எனும் நூலில் பக்கத்துக்கு பக்கம் இணைந்த வடகிழக்குதான் தீர்வு என்றும் கிழக்கை பிரிக்க செய்வது முட்டாள்தனம் என்றும் அதாஉல்லாஹ் இரத்த ஆறை ஓட்டப் போகிறார் கூறியிருப்பதை கருத்தில் கொண்டு இன்று வடகிழக்கு பிரிந்திருக்க வேண்டுமென்று கூறுகிறார்ஆனால் இதே அதாஉல்லாஹ் புலிகளின் துப்பாக்கிகளுக்கு அஞ்சாமல் தனது தலையை அடகு வைத்து கிழக்கு பிரிப்பு தொடர்பான தெளிவான விடயங்களை அதாஉல்லாஹ் முன் மொழிந்தார்.

அது பின்னர் சாத்தியமான வழிகளினால் பிரிக்கப்பட்டது நீங்கள் ஏன் கிழக்கின் எழுச்சியை கொண்டு வந்து அதே தந்தை இன்று வடகிழக்கு பிரிய வேண்டும் என்று கதையாடல்களை சொல்ல விளைகிறீர்கள் என்பது எமக்கு புரியாமலில்லை. அடுத்த தேர்தல் ஒன்று தயார்படுத்துகின்ற வெகுவான திட்டமிடலும் முனைப்பும் உங்களிடம் இல்லை என்று மறுத்து கூற முடியுமா?

கொள்கை பரப்பு செயலாளர் இன்று கிழக்கை பிரித்த அதாஉல்லாஹ் ஒரு இனவாதி என்கின்ற கருத்து தனது தலைமையை திருப்தி படுத்தவும்
ஹிஸ்புல்லா கிழக்கு பிரிந்துதான் இருக்க வேண்டும் என்கின்ற கருத்துக்கான எதிர்ப்பு பிரதேச அரசியல் செயற்பாடுமாகும் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் 
முஸ்லீம் காங்கிரஸ் தனது முதலாவது கலந்துரையாடல் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூனில் நடத்திய போது சுமந்திரன் ஐயா பேச வந்ததையும் அந்த நிகழ்வுக்கான நிதி என்கிருந்து வந்தது என்பதையும் சகோ முபீன் அறியாமலா இருந்தார்.


அதே போல் இரண்டாவது நிகழ்வது கொழும்பில் இடம் பெற்ற போது மனோ கணேசன் அமைச்சருடன் நோர்வேயின் பிரதிநிதி சமுகமளித்ததை இவர்கள் அவதானிக்காமலா இருந்தார்கள் 
ஏலவே வடகிழக்கை இணைத்து தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் நோர்வேயின் பிண்ணனியுடன் இவை இடம் பெறுகின்ற என்கிற விடயங்களும் தெளிவு படுத்தப்பட்டு வருகின்ற சூழலில் 
ஏற்கனவே சோரம் போன மு.கா தலைமையை பயன்படுத்தப் போகிறது என்பதும் உண்மை 
2002ம் ஆண்டு சமாதான உடன்படிக்கை கைசாத்திடப்படுகிறது இதன் போது முஸ்லீம்களை ஒரு இனமாக அல்லாமல் குழுவாக மு.கா கைசாத்திட்டமையும்,இந்த நோர்வேயின் பிண்ணனியுடன் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

காத்தான்குடி பள்ளிவாசலில் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அவர்கள் மரணத்துக்கான ஓலம் இன்னும் எம் கண் முன் ஒலித்திருக்கும் நிலையில் 
வட கிழக்கை பிரிக்க வேண்டும் 
கிழக்கு முஸ்லீம்களின் பெரும்பான்மை மாகாணமாக மாற வேண்டும் என்ற அரசியல் கருத்தை மக்கள் மயப்படுத்திய அதாஉல்லாஹ் வை நா கூசாமல் இனவாதி என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்

கிழக்கின் எழுச்சி காரர்கள் நீங்கள் உங்களது அடுத்த அரசியல் நகர்வுகளுக்காக எடுக்கின்ற முனைப்புகளில் முஸ்லீம் அரசியல் செயல்முறையை பின் நோக்கி நகர்த்தவும்
காலத்துக்கு காலம் மாறி மாறி உதிக்கின்ற விடயங்களில் இன்றைய இளைஞர்கள் அவதானமாக இருப்பது சிறப்பாகும்.

தனது உயிரை கையிலே பிடித்துக் கொண்டு மூதூரில் இருந்து பொத்துவில் வரைக்கும் கிழக்கை பிரிக்க எம்மை தனித்தரப்பாக்க பாதை யாத்திரை அதாஉல்லாஹ் செல்லும் போது இன்றைய மு க வின் தலைவரோடு நெருக்கமாகவும் விசுவாசமாகவும் இருந்து விட்டு இன்று  கிழக்குக்கு தலைமை வேண்டுமென்பதில் உங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டதால் வந்த விளைவுகளே இந்த வெற்று எழுச்சி கோசமல்லம்....

அதாஉல்லாஹ் அற்ப அரசியல் அதிகார வரையறைகளில் வைத்து அளவிடாதீர்கள் 
பதவியை தக்க வைக்க பல வழிமுறைகள் இருந்தும் தனது கொள்கை தொடர்பில் மிக தைரியமாக குரல் கொடுக்கிற கல்வி வலயம் ஒன்றை பெற்றுக் கொள்ள அலைமோதுகின்ற தலைமைகள் அதாஉல்லாஹ்வின் கிழக்கு பிரிப்பு தொடர்பில் பேச தகுயற்றவர்கள்
தலைவனுக்காக பிராத்திப்பதை தவிர இன்று எங்கள் கைகளில் வேறொன்றுமில்லை.

அதாஉல்லாவை அற்ப அரசியல் அதிகார வரையறைகளில் வைத்து அளவிடாதீர்கள் அதாஉல்லாவை அற்ப அரசியல் அதிகார வரையறைகளில் வைத்து அளவிடாதீர்கள் Reviewed by Madawala News on 8/18/2016 11:36:00 PM Rating: 5