ஜப்பானை போட்டு தாக்கிய கோமாளி டிரம்ப் ...


அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டெனால்ட் டிரம்ப் தனது பிரச்சார பேச்சுக்களில் சர்ச்சையை ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார். 


இதன் அடுத்த கட்டமாக தற்போது 

அமெரிக்காவின் நட்பு நாடான ஜப்பானை டிரம்ப் கடுமையாக தாக்கி பேசி உள்ளார்.


தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய டிரம்ப், அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா மீதும் தாக்குதல் நடத்தப்பட்டாலும் ஜப்பானியர்கள் வீட்டில் அமர்ந்து சோனி டிவி பார்த்துக் கொண்டிருப்பார்கள்.ஆனால் ஜப்பான் தாக்கப்பட்டால் நாம் முழு முயற்சி எடுத்து போராடுவோம். ஜப்பான் நமக்காக எதுவும் செய்யாது.


உங்களுக்கு தெரியும், இதற்கும் ஹிலாரி கிளிண்டன் , டிரம்ப் பயங்கரமானவர். அவர் அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேண மாட்டார் என்பார் என பேசி உள்ளார். இது அமெரிக்காவில் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளது.

ஜப்பானை போட்டு தாக்கிய கோமாளி டிரம்ப் ... ஜப்பானை போட்டு தாக்கிய கோமாளி டிரம்ப் ... Reviewed by Madawala News on 8/06/2016 11:12:00 PM Rating: 5