Accaddemy

'இலங்கையில் முதலீடுகளை செய்யுங்கள்..' தென் கொரிய அரசாங்கத்திடம் மகிந்த கோரிக்கை..



இலங்கையில் முதலீடுகளை செய்யுமாறு தென் கொரிய அரசாங்கத்திடம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் நலிவடைவதனை தடுக்க முதலீடுகளை செய்யுமாறு தென் கொரிய பிரதமர் வென்க் கயோ அன்னிடம் மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.

தென் கொரிய நாடாளுமன்றில் பிரதமர் கயோ அன்னை மஹிந்த சந்தித்த போது இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்த முழு அளவில் ஒத்துழைப்பு வழங்குமாறு மஹிந்த ராஜபக்ச, தென் கொரிய பிரதமரிடம் கோரியதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும இலங்கை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்க உள்ள முதலீட்டு வலயங்களில் முதலீடு செய்வது குறித்தும் கவனம் செலுத்துமாறு மஹிந்த தென் கொரிய பிரதமரிடம் கோரியதாக டலஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி அதிகாரம் இல்லாத போதிலும் நாட்டின் அபிவிருத்திக்காக சர்வதேசத்திடம் உதவிகளை கோரியதன் மூலம் மஹிந்தவின் நாட்டுப் பற்று தெளிவாகியுள்ளது என டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார்.
'இலங்கையில் முதலீடுகளை செய்யுங்கள்..' தென் கொரிய அரசாங்கத்திடம் மகிந்த கோரிக்கை.. 'இலங்கையில் முதலீடுகளை செய்யுங்கள்..' தென் கொரிய அரசாங்கத்திடம் மகிந்த கோரிக்கை.. Reviewed by Madawala News on 8/11/2016 06:49:00 AM Rating: 5