Saturday, August 20, 2016

மனோ, திகாம்பரம் நல்லாட்சி ஓராண்டு புர்த்தியும் கௌரவிப்பும் - கொட்டேகேன.

Published by Madawala News on Saturday, August 20, 2016  | (அஷ்ரப் ஏ சமத்)

நல்லாட்சி அரசாங்கத்தின் ஓராண்டு புர்த்தியை முன்னிட்டு  நேற்று(19)ஆம் திகதி பிற்பகல்  புறக்கோட்டை புடவை வியாபாரிகள் சங்கத்தினர் கொட்டாஞ்சேனையில்  சினிவேல்ட் மண்டபத்தில் ஏற்பாடு செய்த நிகழ்வில் அமைச்சர்களான மனோகனேசன், பழனி திகாம்பரம், வே. இராதக்கிருஸ்னன்,  ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம் -  நான் புறக்கோட்டையில் கெயிசா் வீதியில் புடவை தொழில் செய்தவன் - உங்களுக்கு ஏதாவது நடந்தால் இந்த அமைச்சுப்  பொறுப்பை துாக்கி எறிந்து விட்டு உங்களுக்காக வீதியில் இறங்கி  போராடுவேன்,  

(ஏற்கனவே 3 கடைகள் வருமான வரி அறவிடாது  நிதி அமைச்சின் வருமான  அதிகாரிகள் சுற்றி வலைப்பில்   சீல் வைத்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது)
இவ் விடயம் பற்றி இவ் 3 அமைச்சா்களும் நிதி அமைச்சர் ரவி கருநாயக்கவிடம் பேசியுள்ளனர் கடைகள் மீள திறக்க வழிவகுக்கபட்டது.

அமைச்சர் மனோ கனேசன் -உரையாற்றுகையில்

முன்னாள் ஜனாதிதிபதி மகிந்த ராஜபக்ச  அவர்கள்  ஜனாதிபதி தேர்தல்  வேட்பு மனு கோறப்பட்ட காலத்தில் இந்த மனோ கனேசனை அழைத்து இந்த நாட்டில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக இறங்குபடி எண்னைப் பணித்தார்.


அதற்காக அவர்கள் தர இருந்த தொகை  பல கோடிகளாகும். ஆனால் திகாம்பரக்குத்  தெரியும் அது எத்தனை கோடி  ருபா என்று?   நாங்கள் அதுக்கு ஒரு போதும்  துணை போகவில்லை. அன்று அதனை நான் ஏற்றுயிருந்தால் எமது பங்களிப்பு நல்லாட்சிக்கு  இல்லாது போயிருக்கும்.  இன்று மஹிந்தவே ஜனாதிபதி கதிரையில் மீண்டும் அமர்திருப்பார்.  

ஆனால் நாங்கள் தேசிய ரீதியில் சிந்தித்தமையினாலேயே இன்று தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற பலமான கட்சியை ஏற்படுத்தி மாகாணசபை உறுப்பினர்கள். 

பாராளுமன்ற உறுப்பினர்கள் கபினட் அமைச்சர்கள் இராஜாங்கள அமைச்சர் எனப் பெற்று அதனுடாக வட கிழக்கு உட்பட அனைத்து சமுகத்திற்கும் சேவை செய்யக் கூடியதாக இருக்கின்றது.

இதே மகிந்த ராஜபக்ச தான் 2005 ல் வட கிழக்கு வாழ்  தமிழ் மக்ககளது  வாக்குகளை அளிக்காமல் இருக்கும் படி சொல்லித்தான்   விடுதலைப்புலிகள் தலைவர் பிரபகரனிடம் கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து அவத் ஜனாதிபதியாகினார்.  அந்த தவறை அன்று பிரபகாரன் செய்யாமல் இருந்திருந்தால் மகிந்த அன்று ஜனாதிபதியாகி இருந்திருக்க மாட்டார்.

வடக்கில் நிர்மாணிக்கப்பட இருந்த 65 ஆயிரம் பொருத்து வீடுகளை மலையகத்திற்கு நிர்மாணிக்குமாறு பிரதமரிடமும், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.  அத்துடன் வடக்கில் முன்னாள் போராளிகள் புனா் வாழ்வு அளிக்கும் காலத்தில் இரானுவ முகாம்களில் வைத்து   விச ஊசி அடித்துள்ளதாக சொல்லப்படுகின்றது.  இவ்வாறு பாதிக்கப்பட்ட  மரணம், மற்று நோயாளிகளை வடக்கு மாகாண சபையின் முதலமைச்சா் சீ. விக்னேஸ்வரனிடம் உரிய விபரங்களை தரும்படி கேட்டுள்ளேன்.

 அதற்காகவே  அமேரிக்க துாதுவருடன் சென்று அங்கு சிகிச்சை முகாமையிட்டு பரிசோதனை செய்கின்றனா். அமேரிக்க  வைத்திய குழு. கடந்த வாரம் சென்றது. என அமைச்சா் மனோ கனேசன் உரையாற்றினாா்.இதனை நண்பர்களுடன் பகிரவும்.    If you would like to receive our RSS updates via email, simply enter your email address below click subscribe.

Discussion

Blog Archive

© 2015 madawalanews.com All Rights Reserved.
Designed by Alminma Solutions.
back to top