Oceas

அமைச்சர் ரிசாத் பதியுதீன் சற்று முன்னர் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர். என்ன காரணம்?



அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.

மகிந்த அரசின் ஆட்சிக்காலத்தில் கூட்டுறவு கைத்தொழில் அமைச்சராக இருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ.
இலங்கை சதொச நிறுவனம் அவரின் அமைச்சின் கீழேயே அப்போது இருந்து வந்தது,

மகிந்த ஆட்சிக்காலத்தின் கடைசி ஒரு வருடகாலத்திற்குள் இலங்கை சதொச நிறுவனம் 6.6 மில்லியன் கிலோ கிராம் எடை கொண்ட 400 மில்லியன் பெறுமதியான அரிசியை இறக்குமதி செய்திருந்தது.

 இந்த அரிசி அடங்கிய கொள்கலன்களை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் நெருங்கிய நண்பரான வர்த்தகர் ஒருவர் துறைமுகத்தில் இருந்து எடுத்துச்சென்றுள்ளதாகவே பாரிய மோசடிகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய  அரசாங்கத்தில் இலங்கை சதொச நிறுவனம் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் அமைச்சின் கீழ் வந்திருப்பதால் அது தொடர்பான விளக்கங்கள், ஆலோசனைகள் போன்றவற்றை அமைச்சு விசாரணை பிரிவுக்கு வழங்க, அந்த ஊழல் தொடர்பாக தற்போதைய அமைச்சின் விளக்கங்கள், ஆலோசனைகள், முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் போன்றவற்றை பெறுவதற்காக வேண்டி அமைச்சர் ரிசாட் அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே அவர் கடந்த வாரம் இதுதொடர்பில் ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ஆஜராகுமாறு கோரப்பட்ட போதும், தாம் ஒரு திகதியில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணையாளர்களின் முன்னால் ஆஜராவதாக அமைச்சர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

- Razana Manaf-
அமைச்சர் ரிசாத் பதியுதீன் சற்று முன்னர் ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர். என்ன காரணம்? அமைச்சர் ரிசாத் பதியுதீன் சற்று முன்னர்  ஊழல்களுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர். என்ன காரணம்? Reviewed by Madawala News on 8/26/2016 10:29:00 AM Rating: 5