Free Space

மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனுக்கு எதிராக கையெழுத்து வேட்டை

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனின் தன்னிச்சையான செயற்பாட்டை கண்டித்து யாழ் முஸ்லீம் மக்கள் கையெழுத்து போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

  முஸ்லீம் மக்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் குறித்த மாகாண சபை உறுப்பினர் தனது சுயநலனிற்காக பாவிப்பதாக குற்றம்  சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த 7 வருடங்களாக யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் எனும் பெயரில் அங்குள்ள அனைத்து பள்ளிவாசல்களையும் உள்ளடக்கிதாக யாழ் முஸ்லீம் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு பாடுபடும் அமைப்பு இக்கையெழுத்து போராட்டத்தை முன்னெடுத்தது.

இந்த கையெழத்து போராட்டமானது  இன்று மாகாண சபை உறுப்பினர் யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில்  காலை  நடாத்தவுள்ள யாழ்ப்பாணம்  கிளிநொச்சி முஸ்லிம் மீள்குடியேற்றம் தொடர்பிலான விஷேட திட்டமிடல் அமர்வினை பகிஸ்கரிப்பதுடன் அதனை எதிர்ப்பதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 
மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனுக்கு எதிராக கையெழுத்து வேட்டை மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீனுக்கு எதிராக கையெழுத்து வேட்டை Reviewed by Madawala News on 8/27/2016 01:02:00 PM Rating: 5