இலங்கை ஜமாத்தே இஸ்லாமி மடவளை கிளையின் மாபெரும் இஜ்திமா.


மனிதன் இவ்வுலகில் பிறக்கும்போதே அல்லாஹ்வின்பால் தேடலுடையவனாகவே பிறக்கிறான். ஆனால் உலகின் கவர்ச்சிகள் மனிதனின் இயல்பை குறைக்கின்றன. இதனால் அல்லாஹ்வின்பால் இயல்பாக வெளிப்படும் மனிதனது தேடல் குறைந்துவிடுகிறது.
மனித இயல்பை பிரகாசிக்க செய்து அல்லாஹ்வோடு மனிதனை நெருக்கமான தொடர்பில் வைத்திருப்பதற்கு உதவும் சாதனமே திக்ர். அத்தகைய திக்ரை மனிதன் தனது வாழ்வில் எவ்வாறு பராமரிக்க வேண்டும்...?

மனித வாழ்வை ஒழுங்குபடுத்தி இவ்வுலக வாழ்வை சரியாக திட்டமிட்டு, இதனூடாக மருமையில் வெற்றிபெற வழங்கப்பட்ட வழிகாட்டல்களே பிக்ர்.
இந்த திக்ரும், பிக்ரும் எவ்வாறு எமது வாழ்வில் உள்வாங்கப்பட்டு பேணப்பட வேண்டும் என்ற வழிகாட்டல்களை இன்ஷா அல்லாஹ் இஜ்திமா உங்களுக்கு வழங்கும்.

#இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் அமீர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்,
#தென்னிந்திய பிரபல மார்க்க அறிஞர் Dr. K.V.S. ஹபீப் மொஹமட் (MBBS, சிறுவர் நலத்துறை விஷேட வைத்திய நிபுணர்) மற்றும்
#அஷ்-ஷெய்க் ஹுஸ்னி முபாரக் (இஸ்லாஹி) BA

ஆகியோர் உற்பட பெண்களுக்கான இஜ்திமாவிலும் நம் நாட்டைச் சேர்ந்த பிரபல இஸ்லாமி பேச்சாளர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளனர் இன்ஷா அல்லாஹ்

"உள்ளத்திற்கு உயிரூட்டும் திக்ர்,
உலகத்திற்கு வழி சொல்லும் பிக்ர்"
என்ற கருப்பொருள் தாங்கி
ஆகஸ்ட் 05ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி முதல் ஆண்களுக்கும்;
ஆகஸ்ட் மாதம் 07ம் திகதி காலை 8.30 மணி முதல் பெண்களுக்குமாக
மடவளை மதீனா தேசிய பாடசாலை அஷ்ரப் மண்டபத்தில் நடைபெற உள்ளது.


இவ் இஜ்திமாவில் கலந்து கொண்டு பயன்பெறுவோம்.
எமது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அயலவர்களையும் அழைப்போம்.

ஏற்பாடு : இலங்கை ஜமாஅதே இஸ்லாமி- மடவளை மன்றம்


அல்லாஹுதஆலா எம் அனைவரதும் முயற்சிகளை அங்கீகரிப்பானாக.
ஜஸாகல்லாஹு கைரா

இலங்கை ஜமாத்தே இஸ்லாமி மடவளை கிளையின் மாபெரும் இஜ்திமா. இலங்கை ஜமாத்தே இஸ்லாமி மடவளை கிளையின் மாபெரும் இஜ்திமா. Reviewed by Madawala News on 8/04/2016 12:31:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.