Free Space

மீத்தொட்டமுல்லை குப்பைமேடு நூறு நாட்களில் அகற்றப்படும் ...


கொலொன்னாவை மக்களுக்கு மிகவும் மோசமான துன்பமொன்றாக மாறியுள்ள மீத்தொடமுல்லை குப்பை மேட்டை அகற்றும் வேலைதிட்டம் நுறு நாட்களில் ஆரம்பிக்கப்படுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அவர்கள் கொலொன்னாவை பிரதேசத்தில் நடைபெற்ற விசேட மக்கள் சந்திப்பொன்றில் கூறினார்கள்;.

அங்கு உரையாற்றிய உறுப்பினர் மேலும் தனது கருத்தை தெரிவிக்கும்போது,

கடந்த காலத்தில் கொலொன்னாவையில் பலாத்காரமாக குப்பை குவிக்கப்பட்டதால் மீத்தொட்டமுல்லை குப்பை மேடு உருவானது. இதனால் எமது பிரதேச மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்களின் ஆரோக்கிய நிலை மற்றும் கல்வி முழுமையாகவே சீர்கெட்டு வாழ முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் தான் கொலொன்னாவை  என்றாலே ஹொரோயின் போதைப் பொருள் மற்றும் குப்பை மேடு என முழு நாட்டிலும் பிரசித்தமடைந்திருந்தது. கடந்த அரசினால் கொண்டு வரப்பட்ட இந்த குப்பை தொடர்பான  பிரச்சினையை தீர்ப்பதற்கு நாம் முன்வந்துள்ளோம். கௌரவ பிரதமர் அவர்களும் நானும் இப்பிரச்சினையை தீர்ப்பதாக வாக்குறுதி அளித்திருந்தோம். விசேடமாக கௌரவமிக்க பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய மத குருமார்களின் தொடர்ச்சியான தலையீடு இப்பரச்சினையை தீர்ப்பதற்கு எம்மை வலுப்படுத்தின. குப்பை மேட்டிற்கு எதிரான போராட் டத்தை மேற்கொள்ளும் அங்கத்தினர்கள் பிரதேசத்தின பாராளுமன்ற உறுப்பினர் எனும் வகையில் இப்பிரச்சினையை தீர்க்குமாறு கோரி என்னை ஊக்கப்படுத்தினார்கள். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் கொலொன்னாவை குப்பை மேடு அகற்றும் வேலைதிட்டம் ஆரம்பிக்கப்படும் என்பதனால் இதற்குரிய அடிப்படை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை என்னால் இன்று பயமின்றி கூற  முடியுமாயுள்ளது.

விசேடமாக, அரசின் பொருளாதார கமிட்டி கூட்டதின்போது கௌரவ பிரதமர் அவர்கள் மேற்கொண்ட தீர்மானத்திற்கேற்ப முதல் நடவடிக்கையாக கொலொன்hவைக்கு குப்பை கொண்டு வந்து கொட்டப்படுதல் நூறு நாட்களுக்குள் முற்று முழுதாக நிறுத்தப்படும். இதன் பின்னர் கொலொன்னாவைக்கு மீண்டும் குப்பை கொண்டு வரப்படமாட்டாது. பின்னர் குப்பை மேட்டை நாங்கள் மூடிவிடுவோம். இதன் மூலம் நூறு நாட்களுக்குள் குப்பை மேட்டின் 85மூவீத பிரச்சினைகளை நாம் முடிவுறுத்துவோம். ஒன்றரை வருடங்களாக நாம் திரைக்கு பின்னால் கொண்டு நடாத்திய வேலைதிட்டம் மற்றும் போராட்டத்திற்கு உரிய பதில் எங்களுக்கு சென்ற புதன்கிழமை கிடைத்தமைக்காக கௌரவ பிரதமர் அவர்களுக்கும் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் அவர்களுக்கும் விசேட நன்றியைத் தெரிவிக்க வேண்டியுள்ளது. ஆதலால், இவர்கள் இருவருக்கும் விசேட நன்றியை தெரிவித்து கொள்கிறோம். கௌரவ ரணில் விக்கிரமசிங்ஹ அவர்கள் வாக்குறுதி அளித்தால் அதை நிறைவேற்றுவார்கள். ஆதலால், இன்னும் இரண்டு மாதங்கள் கடந்து செல்லும்போது இப்பிரதேசத்தில் கொலொன்னாவை குப்பை மேடு இல்லை என்பதை பாராளுமன்ற உறுப்பினர் எனும் வகையில் நான் பொறுப்புடன் கூறி வைக்க விரும்புகிறேன்.

 
மீத்தொட்டமுல்லை குப்பைமேடு நூறு நாட்களில் அகற்றப்படும் ... மீத்தொட்டமுல்லை குப்பைமேடு நூறு நாட்களில் அகற்றப்படும் ... Reviewed by Madawala News on 8/31/2016 05:24:00 PM Rating: 5