Accaddemy

குருநாகல் மாநாட்டை பகிஷ்கரிக்க கண்டி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தீர்மானம் !



(மொஹொமட் ஆஸிக்)
கண்டி மாவட்டத்தை சேர்ந்த உள்ளுராட்சி மன்றங்களை சேர்ந்த ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் எதிர்வரும் 4 ம் திகதி குருனாகளில் இடம் பெற உள்ள கட்சியின் மா நாட்டில் கலந்து கொள்ளாதருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக உறுப்பினர்களின் ஒரு பகுதியினர் இன்று 25 இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தனர்.

இன்று 25 ம் திகதி கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவின் காரியாலயத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள்  சந்திப்பிலே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் கண்டி மேயர் சேன திஸாநாயக்க, தற்போதைய அரசு உள்ளுராட்சிமன்ற தேர்தலை பின் போடடு மக்களுக்கு தேவையான சேவைகளை செய்து கொள்ள முடியாத நிலைக்கு உள்ளாக்கி உள்ளனர். 

எதிர்வரும் கட்சியின் மாநாட்டுக்கு எங்களை அழைக்கும் கட்சியின் தலைமைத்துவம் இன்று எங்களை செல்லாக் காசிகளாக்கியுள்ளது. இது மிகவும் கவலைக்குறிய விடயமாகும். 

நாங்கள் வேணடுமென்று கூறும் அரசு எங்களை ஒதுக்கி வைத்துள்ளதாகவும் தெரிவித்த அவர் இவ்வாரான சந்தர்பங்களில்மட்டும் நாங்கள் தேவைப்படுகின்றோமா என்றும் வினவினார். அதே நேரம் இவ்வாரான நிலமைகளுக்கு எதிர்பபுத் தெரிவித்து எதிர்வரும் நான்காம் திகதி நடை பெற உள்ள கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கண்டி கங்கவட்ட கோரலய பிரதேச சபையின் முன்னாள் தலைவர் டீ.ஏ.தர்மசேன, யட்டிநுவர பிரதேச சபையின் முன்னாள் தலைவர் துஸித்த வலகெதர, ஹாரிஸ்பத்துவ பிரதேச சiபியன் முன்னால் தலைவர் ஆனந்த ஜயவிலால் உற்பட பலர் இங்கு கருத்து தெரிவித்தனர்.
குருநாகல் மாநாட்டை பகிஷ்கரிக்க கண்டி மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தீர்மானம் ! குருநாகல்  மாநாட்டை பகிஷ்கரிக்க கண்டி  மாவட்ட உள்ளூராட்சி மன்ற  உறுப்பினர்கள் தீர்மானம் ! Reviewed by Madawala News on 8/25/2016 08:29:00 PM Rating: 5