ஹக்கீம்-பஷீர் முரண்பாடுகளை களைய நடுநிலை குழு ..


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்­கீ­முக்கும் தவி­சாளர் முன்னாள் அமைச்சர் பசீர் சேகு­தா­வூத்­துக்கும் இடையில் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டு­களைத் தீர்த்து வைப்­ப­தற்­காக கட்­சியின் அர­சியல் உயர் பீட உறுப்­பி­னர்கள் சிலர் ஒன்­றி­ணைந்து நடு­நிலைக் குழு­வொன்­றினை நிறுவி செயற்­ப­டு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளனர். 

முஸ்லிம் காங்­கி­ரஸின் அர­சியல் உயர்­பீட உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையே தற்­போது தலைவர் ரவூப் ஹக்­கீ­முக்கு ஆத­ர­வான குழு, தவி­சாளர் பசீர் சேகு­தா­வூத்­துக்கு ஆத­ர­வான குழு என்று பிளவு ஏற்­பட்­டி­ருப்­பதால் இரு பிரி­வி­ன­ருக்­கு­மி­டையில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே நடு­நி­லைக்­கு­ழு­வொன்று அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக முஸ்லிம் காங்­கிரஸ் அர­சியல் உயர் பீட உறுப்­பினர் ஒருவர் தெரி­வித்தார். 

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரவு கட்­சியின் தலைமைக் காரி­யா­லயம் தாருஸ்­ஸ­லாமில் இடம்­பெற்ற அர­சியல் உயர்­பீட கூட்­டத்தில் கட்­சியின் தலை­வ­ருக்கும் தவி­சா­ள­ருக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்­பட்டு உச்ச பீட உறுப்­பி­னர்­களும் இரு பிரி­வாகப் பிரிந்து கூச்­ச­லிட்டு குழப்பம் விளைவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்தே நடுநிலைக் குழுவொன்று அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஹக்கீம்-பஷீர் முரண்பாடுகளை களைய நடுநிலை குழு .. ஹக்கீம்-பஷீர் முரண்பாடுகளை களைய நடுநிலை குழு  .. Reviewed by Madawala News on 8/26/2016 11:21:00 AM Rating: 5