அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி வீதி காபட் வீதியாகஎம்.ஜே.எம்.சஜீத்

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டின் ஊடாக மாகாண வீதி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை ஆகியோரின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபெதி இதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

இவ்வீதி அபிவிருத்தி அங்குரார்ப்பன நிகழ்வு இன்று (16) அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபெதி, மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை ஆகியோருடன் மாகாண  வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

இவ்வீதி அபிவிருத்திப்பணிக்காக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினூடாக சுமார் 1கோடி 22இலட்சம் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி வீதி காபட் வீதியாக அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடி வீதி காபட் வீதியாக Reviewed by Madawala News on 8/17/2016 01:06:00 AM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.