அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்:டொனால்டு டிரம்ப்பை விட ஹிலாரி கிளிண்டன் முன்னிலை- ‘போக்ஸ்’ சேனல் கருத்துகணிப்பு...


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப்பை விட ஹிலாரி கிளிண்டன் முன்னிலை- வகிப்பதாக போக்ஸ் சேனல் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி வெளியிட்டுள்ளது.

ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளதால், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நவம்பர் மாதம் 8-ந் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் (வயது 70)  நியமிக்கப்பட்டார். 

அவரை எதிர்த்து  ஜனநாயக கட்சியின் வேட்பாளராக முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனை (68), நியமிக்கப்பட்டுள்ளார்.இதனால் அங்கு இப்போதே தேர்தல் களை கட்ட தொடங்கி விட்டது.

இந்நிலையில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் பல்வேறு மாகாணங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் அடிப்படையில் யாருக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பது குறித்து பிரபல ‘போக்ஸ்’ சேனல் கருத்துகணிப்பு ஒன்றை நடத்தியது. இதில் 10 புள்ளிகள் வித்தியாசத்தில் டொனால்டு டிரம்ப்பை விட ஹிலாரி கிளிண்டன் முன்னிலையில் இருப்பதாக தெரியவந்து உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்:டொனால்டு டிரம்ப்பை விட ஹிலாரி கிளிண்டன் முன்னிலை- ‘போக்ஸ்’ சேனல் கருத்துகணிப்பு... அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்:டொனால்டு டிரம்ப்பை விட ஹிலாரி கிளிண்டன் முன்னிலை- ‘போக்ஸ்’ சேனல் கருத்துகணிப்பு... Reviewed by Madawala News on 8/04/2016 11:01:00 PM Rating: 5