Ad Space Available here

நான்கு ஹஜ் குழுக்கள் சவுதி அரேபியாவை வந்தடைந்தன ...


ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையம் இன் ஹஜ்ஜாஜிகள் இறங்குதளம் மற்றும் மதீனாவில் உள்ள இளவரசர் முஹம்மத் சர்வதேச விமான நிலையம்  என்பன ஹுஜ்ஜாஜ்களை வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் பூர்த்திசெய்யப்பட்டுள்ள நிலையில் ..

நேற்று வியாழக்கிழமை (துல்கஃதா - பிறை-1) அன்று ஹஜ்ஜிற்கான முதலாவது விமானம் தரையிறங்குவதோடு ஹஜ் பருவகாலம் 2016ஆரம்பமாகியுள்ளது.

நேற்றைய தினம் வங்கதேசம், பாகிஸ்தான், இந்தியா மற்றும் தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த 1400 ஹாஜிகள் சவுதி அரேபியாவினை வந்தடைந்துள்ளனர்.

இம்முறை ஹஜ்ஜுக்காக இந்தியா பாகிஸ்தான் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஹாஜிகள் வருகைதரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நான்கு ஹஜ் குழுக்கள் சவுதி அரேபியாவை வந்தடைந்தன ... நான்கு ஹஜ் குழுக்கள் சவுதி அரேபியாவை வந்தடைந்தன ... Reviewed by Madawala News on 8/05/2016 08:43:00 PM Rating: 5