Oceas

பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்கவுக்கு கிடைத்த பொலிஸ் அனுபவம் ...

போக்குவருத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக தண்டப்பனம் செலுத்தும் போது தனக்கு இன்று ஏற்பட்ட அனுபவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் தனக்கு நேற்று ஏற்பட்ட அனுபத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதமருக்கு மிக  நெருக்கமானவர்களுள் ஒருவருமான  ஹாஷூ மாரசிங்க நேற்றைய தினம் கொழும்பில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அங்கு வாகனம் நிறுத்த தடை விதிக்கப்பட்ட ஒரு இடத்தில் தவறுதலாக வாகனம் நிறுத்தியமை தொடர்பில் போக்குவருத்து பொலிஸார் அபராதம் விதித்து பற்றுசீட்டு வழங்கியுள்ளதுடன் அவரது சாரதி அனுமதிபத்திரத்தையும் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்து சென்றுள்ளனர்.

இன்றைய தினம் அபராதத்தை செலுத்தி தனது சாரதி அனுமதிப்பத்திரத்தை எடுக்க குருந்துவத்தை பொலிஸ் நிலையம் சென்றுள்ள அவர் அங்கிருந்து டவுன் ஹோலில் உள்ள தபால் நிலையம் சென்று அபராதம் செலுத்தி மீண்டும் பொலிஸ் நிலைத்துக்கு சென்று சாரதி அனுமதி பத்திரத்தை பெற மூன்று மணித்தியாளங்கள் சென்றுள்ளன.

தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர் இது தொடர்பில் பாராளுமன்றில் தான் எடுத்துக்கூறி பொதுமக்களுக்கு பெரும் அவஸ்தையாக உள்ள இந்த அபராதம் செலுத்தும் முறையை மாற்றி இலகுவான ஒரு முறையை அறிமுகம் செய்ய முயற்சி மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்கவுக்கு கிடைத்த பொலிஸ் அனுபவம் ... பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்கவுக்கு கிடைத்த பொலிஸ் அனுபவம் ... Reviewed by Madawala News on 8/08/2016 06:55:00 PM Rating: 5