Free Space

இனிமேல் சிங்­கள பௌத்த மக்­களின் பிரச்சினைகளை சுட­லை க்­கா­ளி­யி­டமும் சொட­ல­ மா­டை­யி­ட­மும்தான் முறை­யிட வேண்டும்.



நாட்டின் அர­சி­ய­ல­மைப்­புக்கு சிங்­கள மக்கள் மட்­டுமா கட்­டுப்­பட வேண்­டு­மென கேள்வி எழுப்பும் பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர், வடக்கில் சிங்­கள கலா­சா­ரத்­திற்கு தடை­வி­திக்­கப்­ப­டு­கி­றது. ஆனால் நாம் தெற்கில் வேல் திரு­வி­ழா­விற்கு எப்­போ­தா­வது தடை­வி­தித்­தி­ருக்­கின்­றோமா என்றும் வின­வி­யுள்ளார்.

கொழும்பில் இடம்­பெற்ற பொது­ப­ல­சே­னாவின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
தேரர் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

நாடும் சிங்­கள பௌத்த மக்­களும் எதிர்­நோக்­கி­யுள்ள நெருக்­க­டிகள் தொடர்­பாக கடந்­த­கால ஆட்­சி­யா­ளர்­க­ளையும் இன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளையும் தெளிவு­ப­டுத்­தினோம். ஆனால் எவ்­வி­த­மான நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. இனி சுட­லைக்­கா­ளி­யி­டமும் சொட­ல­மா­டை­யி­ட­மும்தான் முறை­யிட வேண்டும்.

நாட்டின் அர­சி­ய­ல­மைப்­பிற்கு இங்கு வாழும் அனைத்து இன மக்­களும் கட்­டுப்­பட வேண்டும். ஆனால் இன்று சிங்­கள தலை­வர்­களும் சிங்­கள மக்­களும் மட்­டுமே அர­சி­ய­ல­மைப்­புக்கு கட்­டுப்­பட வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது.

வடக்கின் முத­ல­மைச்சர் இன­வாத ரீதி­யா­கவே தொடர்ந்தும் பேசி வரு­கிறார். வடக்கை போன்று கிழக்­கிலும் இன­வாதம் தலை­தூக்க ஆரம்­பித்­துள்­ளது.

யாழ். பல்­க­லைக்­க­ழ­கத்தில் இடம்­பெற்ற மோதல் இலங்­கையின் கலா­சாரம் வடக்­கிற்கு பொருந்­தாது என்­ப­த­னையே வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.
தமிழ் மக்கள் நடத்தும் வேல்­வி­ழாவை நாம் தெற்கில் எதிர்த்தால் என்ன நடக்கும் ? நாமும் அப்­படி செய்­தி­ருந்தால் எப்­ப­டி­யி­ருக்கும் ? தெற்கில் தேசிய நல்­லி­ணக்கம் தொடர்­பாக பேசும் ஜனா­தி­பதி வடக்கில் அது தொடர்பில் பேசு­வ­தில்லை.

எரான் விக்­­ர­ம­ரத்ன " இயேசு ஜீவிக்­கிறார்" தேவா­ல­யங்கள் எத்­த­னையை வடக்கில் நிர்­மா­ணித்­துள்ளார். அதற்கு ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் பதி­ல­ளிக்க வேண்டும்.

தமிழ் மக்களுக்கு பிரச்சினையென்றால் இந்தியா தலையிடுகிறது.
முஸ்லிம் மக்களுக்கு பிரச்சினை என்றால் அரபு நாடுகள் தலையிடுகின்றன. ஆனால் சிங்களவர்களின் பிரச்சினைகளை தீர்க்க எவரும் இல்லை என்றும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

இனிமேல் சிங்­கள பௌத்த மக்­களின் பிரச்சினைகளை சுட­லை க்­கா­ளி­யி­டமும் சொட­ல­ மா­டை­யி­ட­மும்தான் முறை­யிட வேண்டும். இனிமேல் சிங்­கள பௌத்த மக்­களின் பிரச்சினைகளை சுட­லை க்­கா­ளி­யி­டமும் சொட­ல­ மா­டை­யி­ட­மும்தான் முறை­யிட வேண்டும். Reviewed by Madawala News on 8/04/2016 10:24:00 AM Rating: 5