Accaddemy

நாடு முழுவதும் கடையடைப்பு நடவடிக்கை... ஜனாதிபதியின் அழைப்புக்கு பணிந்தனர்.



உத்தேச வற் வரி அதிகரிப்புக்கு எதிராக வர்த்தக சங்கங்களினால் இன்று நாடு முழுவதும் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று நடாத்தப்படவிருந்த எதிர்ப்பு நடவடிக்கையை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்த அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை தள்ளிப் போடப்பட்டுள்ளதாகவும் வர்த்தக சங்கங்களின் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், வட் வரி சீர்திருத்தம் தொடர்பான சட்ட மூலத்தை இவ்வாரம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவராதிருக்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிடைத்த தகவலையும் அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.  D C
நாடு முழுவதும் கடையடைப்பு நடவடிக்கை... ஜனாதிபதியின் அழைப்புக்கு பணிந்தனர். நாடு முழுவதும் கடையடைப்பு நடவடிக்கை... ஜனாதிபதியின் அழைப்புக்கு பணிந்தனர். Reviewed by Madawala News on 8/09/2016 08:29:00 AM Rating: 5