Accaddemy

பொம்மை துப்பாக்கி முன்னாள் ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் பெலியத்த தொகுதி அமைப்பாளராக நியமனம்....


முன்னாள் ஹம்பந்தோட்டை மாநகர சபை மேயர் எராஜ் ரவிந்திர பெர்னாண்டோ பெலியத்த தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று சுதந்திர கட்சியினால் நியமிக்கப்பட அமைப்பாளர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் ஹம்பந்தோட்டை மாநகர சபை மேயர் எராஜ் ரவிந்திர பெர்னாண்டோவுக்கு பெலியத்த தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மஹிந்த ராஜபக்‌ஷ ஆட்சி காலத்தில்       ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் ஹம்பந்தோட்டை துறைமுகத்தை மேற்பார்வை செய்ய சென்றபோது அங்கு அவர்களுக்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு அவர்கள் சென்ற வாகனம் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதல் பின்னணியில் எராஜ் இருந்ததாக அப்போது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் துப்பாக்கி ஒன்றுடன் ஹம்பந்தோட்டை  துறைமுகத்திற்குள்  அவர் வந்திருந்தமையும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
பொம்மை துப்பாக்கி முன்னாள் ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் பெலியத்த தொகுதி அமைப்பாளராக நியமனம்.... பொம்மை துப்பாக்கி முன்னாள் ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் பெலியத்த தொகுதி அமைப்பாளராக நியமனம்.... Reviewed by Madawala News on 8/17/2016 07:21:00 PM Rating: 5