Kidny

Kidny

வெளியேற்றப்பட்ட சுதந்திர கட்சி உறுப்பினர்களை ஐக்கிய தேசிய கட்சி இணைத்துக்கொள்ளாது...


இடைநிறுத்தப்பட்டுள்ள சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் எவரையும் ஐக்கிய தேசிய கட்சி இணைத்துகொள்ளாது என ஐக்கிய தேசிய கட்சி உயர்மட்ட தகவல்கள் மடவளை நியுசுக்கு உறுதிப்படுத்தின.

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பிரபல உறுப்பினர்களான ரோஹித அபேகுனவர்தன, பவித்ரா வன்னியாராச்சி,காமினி லொகுகே, சீ பி ரத்னாயக, கேஹெலிய ரம்புக்வல உள்ளிட்ட பலரின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்பட்டன.

ஏற்கனவே இவர்களின் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் இது தொடர்பில் நாம் ஐக்கிய தேசிய கட்சி உயர்மட்ட உறுப்பினர் ஒருவரிடம் இது தொடர்பில் வினவிய போது ..

இடைநிறுத்தப்பட்டுள்ள சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் எவரையும் ஐக்கிய தேசிய கட்சி இணைத்துகொள்ளாது என திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
வெளியேற்றப்பட்ட சுதந்திர கட்சி உறுப்பினர்களை ஐக்கிய தேசிய கட்சி இணைத்துக்கொள்ளாது... வெளியேற்றப்பட்ட சுதந்திர கட்சி உறுப்பினர்களை ஐக்கிய தேசிய கட்சி இணைத்துக்கொள்ளாது... Reviewed by Madawala News on 8/17/2016 02:55:00 PM Rating: 5