Accaddemy

ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஹஜ் வழிகாட்டலும் வரவேற்பும்


ஐக்கிய இராச்சிய இலங்கை முஸ்லிம் கலாச்சார நிலையத்துடன் இணைந்து ஐக்கிய இராச்சிய கல்ஹின்னை நலன்புரி சங்கம் கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் ஹாஜிகளுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சியும் ஹஜ் சம்பந்தப்பட்ட விளக்கவுரைகளும் வரவேற்பும் எதிர் வரும் சனிக் கிழமை 20ம் திகதி ஆகஸ்ட் மாதம் 2016 ஆண்டு 5.00 மணி முதல் 10.00 மணி வரை ஐக்கிய இராச்சிய இலங்கை முஸ்லிம் கலாச்சார நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்ஷா அல்லாஹ் இந் நிகழ்ச்சியில் ஹஜ், மக்கா, மதீனா ஆகியவற்றின் சிறப்புகள் பற்றியும் ஹஜ்ஜின் முக்கியத்துவம் பற்றியும் மக்களுக்கு ஹஜ் செய்வதற்கு உற்சாகப்படுத்தும் விசேட உரைகளை   அஷ்செய்க் ஆபித் கான் அவர்கள் ஆங்கிலத்திலும் அஷ்செய்க் அல் ஹாபிஸ் ஷபீக் மௌலவி அவர்கள் தமிழிலும் நிகழ்த்தவிருக்கிறார்கள.
 
அத்துடன் ஹஜ் வழிகாட்டலில் முப்பத்தி இரண்டு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவசாலியான அல்ஹாஜ் அமானுல்லா கமால்தீன் அவர்கள் ஹஜ் செய்யும் முறை பற்றியும் ஹஜ்ஜின் நடை முறைகள்  அனுபவங்கள் பற்றியும் விரிவாக விளக்கமளிக்கவிருக்கிறார்கள்.
         
இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற இருக்கும் ஹாஜிகளும் எதிர்வரும் வருடங்களில் ஹஜ் செய்ய இருப்பவர்களும் மிகவும் பிரயோசனமுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அழைக்கப்படுகிறார்கள்;.
 
அத்துடன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து பறப்படும்  இலங்கையைச் சேர்ந்த ஹாஜிமார்களை ஒரே மேடையில் சந்தித்து ஸலாம் கொடுத்து வழியனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
 
அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு வேண்டிக்கொள்ளப்படுகின்றது.
 
அமானத்ஸ்
குளோபல் தஃவா சேவை - இலன்டன்
ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஹஜ் வழிகாட்டலும் வரவேற்பும் ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஹஜ் வழிகாட்டலும் வரவேற்பும் Reviewed by Madawala News on 8/14/2016 10:02:00 AM Rating: 5