Free Space

இந்திய அரசியலை ஆட்டம்காண செய்துள்ள மாடுகள்..


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-
தலித் வன்கொடுமையை எதிர்த்து குஜராத்தில் நடக்கும் மாரத்தான் ஊர்வலம் பல்வேறு தரப்பினரையும் ஈர்த்துள்ளது. துப்புறவு பணிகளை நிறுத்திவிட்டு தலித்துகள் இந்த ஊர்வலத்திற்கு ஆதரவு அளித்து வருவதால் மாநிலத்தில் சுகாதாரம் சீரழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் உனா நகரில் இறந்த மாட்டின் தோலை உரித்ததாக கூறி தலித் இளைஞர்கள் 4 பேரை பசு பாதுகாவலர்கள் எனப்படும் கும்பல் அடித்து காயப்படுத்தியது. இதை தொடர்ந்து வேறுசில மாநிலங்களிலும் தலித்துகள் மீதான வன்கொடுமை அதிகரித்துள்ளது.

இதற்கு முடிவுகட்ட வலியுறுத்தி அகமதாபாத்தில் இருந்து உனா வரையில் உள்ள 400 கி.மீ. தொலைவுக்கு 60 பேர் அடங்கிய தலித் யாத்திரையை நடைபெறுகிறது. கடந்த 4-ம் தேதி தொடங்கிய இந்த ஊர்வலம் வரும் 14-ம் தேதி நிறைவடையும். சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று சாதி கொடுமையில் இருந்து விடுதலை பெறுவதை குறிக்கும் வகையில் தேசிய கொடியை ஏற்றவும் தலித் அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே உனா சம்பவம் துயரமானது என்று கூறியுள்ள பாஜக, உத்திரபிரதேசத்தில் நடக்கும் தலித் வன்கொடுமைகளுக்கு ஆளும் சமாஜ்வாதி அரசே காரணம் என கூறியுள்ளது. இந்நிலையில் தலித் யாத்திரை செல்லும் ஊர்களில் தலித் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். இறந்த மாடுகளின் தோலை உரிக்க மறுப்பதுடன் கழிவுகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகளை செய்யவும் தலித்துகள் மறுப்பதால் குஜராத்தில் சுகாதார சீர்கேடு பரவ ஆரம்பித்துள்ளது.
இந்திய அரசியலை ஆட்டம்காண செய்துள்ள மாடுகள்.. இந்திய அரசியலை ஆட்டம்காண செய்துள்ள  மாடுகள்.. Reviewed by Madawala News on 8/11/2016 11:10:00 PM Rating: 5