tg

ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் தங்கம் வென்று உசேன் போல்ட் அசத்தல் சாதனை.

100 மீ., ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார் ஜமைக்காவின் உசேன் போல்ட்.
.

பெரிதும் எதிர்பாக்கப்பட்ட ஆண்கள் 100மீ., ஓட்டத்தில், ஜமைக்காவின் உசேன் போல்ட் 9.81 வினாடிகளில் இலக்கை அடைந்து தங்கம் வென்றார்.
.
ஒலிம்பிக்., 100 மீ., ஓட்டத்தில் தொடர்ந்து 3 முறை தங்கம் வென்று போல்ட் ‛ஹாட்ரிக்' சாதனை புரிந்தார். ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை 7 தங்கப் பதக்கங்களை உசேன் போல்ட் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
.

அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் (9.89 வினாடிகள்) வெள்ளியும், கனடாவின் ஆன்ட்ரே டி கிரேஸ்(9.91 வினாடிகள்) வெண்கலமும் வென்றனர். அடுத்த உசேன் போல்ட்டாக வருவார் என எதிர்பார்க்கப்படும் ஜமைக்கா வீரர் யோகன் பிளேக்கிற்கு 4வது இடமே கிடைத்தது.

ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் தங்கம் வென்று உசேன் போல்ட் அசத்தல் சாதனை. ஒலிம்பிக்கில் ஹாட்ரிக் தங்கம் வென்று உசேன் போல்ட் அசத்தல் சாதனை. Reviewed by Madawala News on 8/15/2016 07:44:00 AM Rating: 5