Oceas

மடவளையைச் சேர்ந்த ஊடக வியலாளர் ஜே.எம்.ஹாபீஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்....


மலையக கலை கலாசார சங்கத்தின் இரத்தின தீபம் அமைப்பு ஒழுங்கு செய்த ஒராபிபாசா நினைவு தினவைபவத்தில் மடவளையைச் சேர்ந்த ஊடக வியலாளர் ஜே.எம்.ஹாபீஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கண்டி கெப்பட்டிப்பொல மண்டபத்தில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட வீரகேசரி தினசரியின் ஆசிரிய பீடத்தைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்டீபன் மற்றும் சுதேச வைத்தியர் ஏ.சீ.எல்.எம்.றாசீக் ஆகியோர் விருதுகளை வழங்கி வைத்தனர்.

இவ்வைபவத்தில் வைத்து ஒராபி பாசாவின் சிந்தனையால் கவரப்பட்ட இலங்கையின் முன்னணி அறிஞர்களில் ஒருவரான சட்டத்தரணி சித்திலெவ்வை மரைக்கார் அவர்களின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்த செல்வன் பிலால் மறைக்காரும்(கண்டி திருத்துவக் கல்லூரி மாணவன்),  கௌரவிக்கப்பட்டார். அவருக்கான விருதை கிறிகட் வீரர் முரளீதரனின் தந்தை எஸ். முத்தையா வழங்கினார்.

இவ்வைபவத்தில் இன்னும் பல கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மடவளையைச் சேர்ந்த ஊடக வியலாளர் ஜே.எம்.ஹாபீஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.... மடவளையைச் சேர்ந்த ஊடக வியலாளர் ஜே.எம்.ஹாபீஸ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.... Reviewed by Madawala News on 8/13/2016 11:35:00 PM Rating: 5