Ad Space Available here

ஹசன் அலிக்காக பசீர் ஆயுதமாக மாறுவது பகற் கனவா??


ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்

ஹசன் அலியிடம் ஆயுதங்கள் இல்லை.. ஆன போதும் தாக்கினாய்... ஆனதினால் நான் ஆயுதமாகின்றேன். இவ்வாறு நான் சொல்லவில்லை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதாவூதினை ஆறு மாதங்களுக்கு முன்னர் நான் சந்தித்த வேலையில் தனது அடுத்த கட்ட நடவடிக்கை கட்சிக்குள் எவ்வாறு இருக்க போகின்றது என்பது சம்பந்தமாக உரையாடிய வேலையில் தான் ஒரு போராட்ட வீரன் என்ற அடிப்படையில் தன்னிடம் கூறிய கருத்தே மேற்சொன்ன கருத்தாகும்.


ஆனால் இன்று 23.08.2016 செவ்வாய் கிழமை சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமை காரியாலையமான தாருஸ்ஸலாமில் இடம் பெற்ற கட்சியின் உயர் பீட கூட்டத்தில் தலைமையின் வேண்டுகோளினையும்  உயர் பீட உறுப்பினர்கள் புறக்கணித்து தவிசாளர் பசீர் சேகுதாவூத்தினை பேச விடாது வாய்க்கட்டு போட்டமையினை பார்க்கும் பொழுது பாலகுமார் வளர்த்து உறுவாக்கிய போராட்ட வீரன் பசீர் சேகுதாவூத் எப்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக ஆயுதமாக மாற போகின்றார் என்பது பகற்கனவாக மாறியதை அவதானிக்க கூடியதாக இருந்தது.


உயர் பீட கூட்டத்தில் உள்ளூராட்சி மன்ற விடயங்கள் பாராளுமன்ற மறு சீரமைப்பு விடயங்கள் கட்சியின் யாப்பு மாற்றம் கட்சியின் கிளைகள் புணரமைப்பு தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு அதன் பின்னர் தலைவர் ஹக்கீம்இ நிசாம் காரியப்பர்இ சபீக் ரஜாப்டீன்  ஹாபிஸ் நசீர் அஹமட்இ பாயிஸ் போன்றோர்களால் தாருஸ்ஸலாம் தொடர்பான கணக்கறிக்கை முன்வைக்கப்பட்டது.


இந்த நிலையிலே கட்சியின் தலைவரினால் எவருக்கும் கணக்கறிக்கையில் ஏதாவது சந்தேகங்கள் இருக்கின்றதா என வினவப்பட்ட பொழுது கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தன்னால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு தலைவர் சரியான பதிலினை தரவில்லை என கூறிய வேலையில்  அங்கிருந்த உயர் பீட உறுப்பினர்களான தவம்இ பழீல்இ மன்சூர்இ லாஹிர்  உட்பட மற்றும் பலர் பசீரினை பேச விடாமல் தடுத்தனர். பசீர்சேகுதாவூத் எவ்வளவோ முயற்சித்தும் நபர்களின் கூக்குறலிற்கும் இடையூறுகளிற்கும் மத்தியில்  பலன் கிடைக்காமலே போனது. 


அத்தோடு தவிசாளர் பசீரை கட்சியினை விட்டு வெளியேற்றுமாறும் கூக்குறலிட்டனர்.

ஆனால் கட்சியின் தலைவர் ஹக்கீம் பலமுறைகள் கட்சியின் தவிசாளரை பேச விடுமாறு உயர்பீட உறுப்பினர்களை கேட்டுக்கொண்டும் உயர் பீட உறுப்பினர்களின் தொடர்ந்தேர்ச்சியான இடையூறுகளினால் பசீர் சேகுதாவூத்தினால் தான் பேச முற்பட்ட விடயங்களை இறுதி வரைக்கும் பேச முடியாத விடயமாகவே காணப்பட இறுதியில் உயர் பீட கூட்டம் முடிவிற்கு கொண்டுவருவதாக கூறி கட்சியின் தலைமை வெளி நடப்பு செய்தது.


சில வாரங்களாக நான் ஹசன் அலிக்காக ஆயுதமாக மாற போகின்றேன் என்றும்இ தாருஸ்ஸலாமின் அணைத்து கணக்கறிக்கைகளையும் மிகச் சரியான முறையில் முஸ்லிம் காங்கிரசின் தலைமை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் எனவும்இ தலைமையின் இரகசியங்கள் தன்கைவசம் எனவும்இ எனது தலைவன் ஒருவனே அவனே போராட்ட வீரன் பாலகுமார் என்றும்இ அதற்கு பின்னர்தான் பெரும் தலைவர் அஸ்ரஃப்இ ஹக்கீம் எனவும்இ சொத்து விபரங்கள் கேட்டு ஹக்கீமிற்கு பகிரங்க கடிதம் எழுதுதல் போன்ற பகிரங்க அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்த கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத்தின் கர்ச்சிக்கும் அரசியல் குரல் இன்றைய முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட கூட்டத்தோடு புஸ்வானமாகி விட்டதா என்பதுதான் எல்லோருடைய கேள்வியாக இருக்கின்றது.


நன்றி-ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்.

ஹசன் அலிக்காக பசீர் ஆயுதமாக மாறுவது பகற் கனவா?? ஹசன் அலிக்காக பசீர் ஆயுதமாக மாறுவது பகற் கனவா?? Reviewed by Madawala News on 8/24/2016 01:18:00 PM Rating: 5