Free Space

காத்தான்குடி சந்தை சதுக்க வீதி கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் புனரமைப்பு.


மட்டக்களப்பு மாவட்டத்தின்
காத்தான்குடி பிரதேசத்தில் அமையப்பெற்றுள்ள சந்தை சதுக்க வீதி மற்றும் அதனை அண்மித்த உள்ளக ஒழுங்கைகளை புனரமைப்பு செய்வதற்காக கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் அவ்வீதி உள்வாங்கப்பட்டு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. 

காத்தான்குடி பொது சந்தை, மீரா ஜும்மா பள்ளி ஆகியவற்றை அண்மித்த அதிக மக்கள் பயன்பாட்டையுடைய இவ் வீதியானது பல வருட காலமாக புனரமைக்கப்படாமல் குன்றும் குழியுமாக காணப்படுவதோடு மழை காலங்களில் வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக இவ்வீதியை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இவ்வீதியினை புனரமைப்பு செய்து தருமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களிடம் பொது மக்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து மக்கள் பங்களிப்புடன் இவ்வீதியினை புனரமைக்க கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் இவ்வீதியானது உள்வாங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் அமல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் மோற்கொள்ளப்பட்டு வருவதோடுஇத்திட்டத்திற்காக பத்து லட்சம் ரூபாய் நிதியொதிக்கீடு செய்யப்பட்டு கொங்ரீட் வீதி இடப்பட இருக்கின்றது.

இவ்வீதியானது சிறந்த முறையில் நீர் தேங்கி நிற்காமல் வடிந்தோடக்கூடிய முறையிலும் சிறந்த தரமுள்ள கொங்ரீட் கலவைகள் இடப்பட்டு இவ்வீதி அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் காத்தான்குடி நகரசபையின் தொழிநுட்ப  உத்தியோகத்தர்களுடன்  உரிய இடத்திற்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டார்.

இதன் போது இவ்வீதியினுடைய நிலைமைகளை எடுத்துரைத்துஅதற்கான ஆலோசனைகளையும்,அறிவுரைகளையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் வழங்கினார். 


காத்தான்குடி சந்தை சதுக்க வீதி கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் புனரமைப்பு. காத்தான்குடி சந்தை சதுக்க வீதி கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் புனரமைப்பு. Reviewed by Madawala News on 8/13/2016 05:28:00 PM Rating: 5