முஸ்லீங்களின் பிரச்சினைகளுக்கு மிகவிரைவில் தீர்வு : முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பில் ஜனாதிபதி ...


முஸ்லிம் சமூகம் சமகாலத்தில் எதிர்நோக்கும் கல்வி,கலாசார, மீள்குடியேற்ற மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து எடுத்துக்கூறியுள்ளனர்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா, தேசிய ஷூரா கவுன்சில், அகில இலங்கை YMMA பேரவை, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், இலங்கை ஜமாத்தே இஸ்லாமி அமைப்பு மற்றும் அஷ்ஷபாப் உட்பட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்து பிரச்சினைகளை விளக்கியுள்ளனர்.

தம்புள்ளை, தெஹிவளை,கண்டி லைன் பள்ளிவாயல், கிராண்ட்பாஸ் ஆகிய பள்ளிவாயல்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, அக்கரைப்பற்றில் சவூதி அரேபிய அரசாங்கத்தின் உதவியால் நிர்மாணிக்கப்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகள் கையளிக்கப்படாமை, தென் மாகாண ஆசிரியர் நியமனத்தில் முஸ்லிம்கள் நிராகரிக்கப்பட்டுள்ளமை, மௌலவி ஆசிரியர் நியமனம் மற்றும் கல்வி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள முஸ்லிம் கல்வி தொடர்பான அறிக்கை நடைமுறைப்படுத்தப்படாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டது.

இப்பிரச்சினைகளை கேட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும், இது தொடர்பாக மேலதிக செயலாளரிடம் பொறுப்புக்களை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.


முஸ்லீங்களின் பிரச்சினைகளுக்கு மிகவிரைவில் தீர்வு : முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பில் ஜனாதிபதி ... முஸ்லீங்களின் பிரச்சினைகளுக்கு மிகவிரைவில் தீர்வு : முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பில் ஜனாதிபதி ... Reviewed by Madawala News on 8/04/2016 11:53:00 PM Rating: 5

No comments:

உங்கள் கருத்துக்களை எமது Facebook பக்கத்தில் உடனடியாக பதிவிடலாம் : https://www.facebook.com/madawalanewsweb

அல்லது இங்கும் பதிவிடலாம்.
செய்திக்கு/ கட்டுரைக்கு தொடர்புடைய ஆரோக்கியமான கருத்துக்கள் மட்டுமே பிரசுரிக்கப்படும். தனிமனித , அமைப்புகள் மற்றும் கட்சிகள் மீதான முறையற்ற / தரக்குறைவான / உபயோகமற்ற விமர்சனங்கள் மற்றும் மதங்கள், மத நம்பிக்கைகள், மத வழிபாடுகள் மீதான மோசமான கருத்துக்கள் அங்கீகரிக்கப்படாது.

சமுகத்திற்கு பிரயோசனமான , ஆரோக்கியமான கருத்துக்களை உங்கள் சொந்தப் பெயரில் உருவாககப்ட்ட Google / gmail ஐ.டிகளில் இருந்து பதிவிடவும்.

மேலும் நீங்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் பிரதம ஆசிரியரின் அங்கீகரிப்பிக்கு பின்னரே பிரசுரிக்கப்பட உள்ளதால், ஒரு கருத்தை இரண்டு, மூன்று முறை பதிவிட வேண்டாம்.
நன்றி.