Accaddemy

இந்தியாவில் மர்மமான முறையில் மாடுகள் இறந்துவருவதால் பரபரப்பு


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் 

இந்தியாவில் மாட்டு இறைச்சி தொடர்பாக முஸ்லிம்கள் மற்றும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்ததை தொடர்ந்து மருமமான முறையில் இந்தியாவில் மாடுகள் செத்து வருகின்றன .


பல மாநிலங்களில் மாடுகள் இறந்து வரும் நிலையில் ராஜஸ்தானில் அதிக மாடுகள் ஒரே நேரத்தில் இறந்தமை பெரும் பர பரப்பை உட்படுத்தி உள்ளது ராஜஸ்தான் மாநிலத்தில் 500 மாடுகள் உயிரிழந்துள்ளன.


இச்சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உயிரிழந்த மாடுகள் தங்கி இருந்த இடத்தை நேரில் பார்வையிடுவதற்காக ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே நேரில் விரைந்துள்ளார். 


மாடுகள் உயிரிழந்ததற்கு உண்மையான காரணத்தை கண்டறியவும், உணவு அளிக்கப்படாமல் மாடுகள்வதைக்கப்பட்டது குறித்தும் விசாரிக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.


இந்தியாவில் மர்மமான முறையில் மாடுகள் இறந்துவருவதால் பரபரப்பு இந்தியாவில் மர்மமான முறையில் மாடுகள் இறந்துவருவதால்  பரபரப்பு Reviewed by Madawala News on 8/06/2016 09:55:00 PM Rating: 5