Ad Space avaiable

அமெரிக்கா லூசியானா மாகாணத்தில் கடும் வெள்ளம் ...

அமெரிக்காவின் லூயிசியானா மாகாணத்தில் ஏற்பட்டுள்ள முன் எப்போதும் இல்லாத வெள்ளப்பெருக்கை தொடர்ந்து அம்மாகாணத்தை பேரிடர் பாதித்த பகுதியாக அந்த நாட்டு அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பின் பின்னர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு அரசு உதவிகள் கிடைக்கவுள்ளன.

இந்த வெள்ளப்பெருக்கில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில் கடும் மழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 20,000க்கும் மேலான பொதுமக்களை அவசர சேவை பணியாளர்கள் காப்பாற்றியுள்ளனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கி வருகின்றனர்.நீரின் அளவு அதிகரித்து வரும் நிலையில், அதில் சிக்கியுள்ளவர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு வழங்கும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.

இதுவரை 38 செ.மீ அளவு மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா லூசியானா மாகாணத்தில் கடும் வெள்ளம் ... அமெரிக்கா லூசியானா மாகாணத்தில் கடும் வெள்ளம் ... Reviewed by Madawala News on 8/15/2016 04:00:00 PM Rating: 5