Free Space

அரசியல் தலையீடுகளால் தடைப்படும் சம்மாந்துறை அபிவிருத்தி திட்டங்கள்.



-முஹம்மத் ரஷாத்-
இன்று தொழில் பிரச்சினை என்பது நாட்டின் பிரதான பொருளாதார பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகின்றது.அதிலும் பிரதானமாக கடந்த 30 வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இது மிகவும் உக்கிரமமாக காணப்படுகின்றது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கத்தோடு இந்த இரண்டு பிரதேசங்களையும் மையமாக கொண்டு கைத்தொழில் பேட்டைகள் அமைக்க கடந்த வரவுசெலவு திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் கௌரவ றிஸாட் பதியுதீன் அவர்களால் பெருந்தொகையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

குறித்த கைத்தொழில் பேட்டைகளில் ஒன்று சம்மாந்துறைப் பிரதேசத்தில் அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்கான காணியாக சம்மாந்துறை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் பராமரிப்பில் இருந்த 20 ஏக்கருக்கு மேற்பட்ட நிலம் இனங்காணப்பட்டு அதை பெற்றுக்கொள்வதற்கான அனுமதியும் கூட்டுறவு சங்க தற்போதைய நிர்வாகத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது.

சமகால பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்தும் அரசியல் தலையீடுகள் காரணமாக இதை பெற்றுக்கொள்வதில் சிரமங்கள் எதிர்நோக்கப்பட்டு வருவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மேலும் குறித்த சம்மாந்துறைப் பிரதேசத்தில் இருந்து வேறு நகரங்களுக்கு சென்று பல இளைஞர் யுவதிகள் தொழில் புரிந்து வருவது நாங்கள் அனைவரும் அறிந்த ஓரு விடயமாகும். இந்த நிலமை காரணமாக எமது சமூக இளைஞர்களும் யுவதிகளும் பலவித பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க நேர்ந்துள்ளதும் இந்த விடயம் குறித்து பல சந்தர்ப்பங்களிலும் மத தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அவலநிலை காரணமாக சில கசப்பான நிகழ்வுகள் இடம்பெற்றிருப்பதனை இந்த சமூகம் இன்னும் மறந்துவிடவில்லை.

இந்த கைத்தொழில் பேட்டை திட்டமானது இவ்வாறான பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமையும் என்பது சம்மாந்துறை புத்திஜிவிகளினதும் சமூகஆர்வளர்களதும் பெற்றோர்களினதும் நம்பிக்கையாகும். இந்த திட்டமானது அகில இலங்தை மக்கள் காங்ரஸ் கட்சியின் தலைவரும் கொரவ அமைச்சருமான றிஸாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் அவர்களால் செயற்படுத்தப்படுவது இப்பிரதேச மக்கள் நன்கு அறிந்த விடயமாகும்.

இருப்பினும் கடந்த 6 மாதத்திற்கு மேலாக இப்பிரதேச அரச நிர்வாகிகளோடு அமைச்சு தொடர்புபட்டு இதற்கான இட ஒதுக்கீட்டை பெற்றுத்தருமாறு கோரியும் மாவட்ட செயலாளரினால் இப்பிரதேச மக்கள் பிரதிநிதிகள் குறிப்பிட்ட காணியானது இதைவிட முக்கிய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்திருப்பது வேதனைப்படவேண்டிய விடயமாகும்.

குறுகிய அரசியல் நோக்கங்களை கருத்தில் கொள்ளாமல் இவ்வாறான சமூகநல திட்டங்களை செயற்படுத்தும்போது சமூக உணர்வோடு அதிகாரத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளை செயற்படுமாறும் அல்லது அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சிக்கு குறித்த பிரதேசத்தில் இவ்வாறான சமூகநல திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய மக்கள் பிரதிநிதித்துவத்தை பெற்றுத்தந்து உதவுமாறு உரிய அதிகாரிகளிடத்தில் சம்மாந்துறை புத்திஜீவிகள் மற்றும் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அரசியல் தலையீடுகளால் தடைப்படும் சம்மாந்துறை அபிவிருத்தி திட்டங்கள். அரசியல் தலையீடுகளால் தடைப்படும் சம்மாந்துறை அபிவிருத்தி திட்டங்கள். Reviewed by Madawala News on 8/04/2016 03:45:00 PM Rating: 5