Accaddemy

குற்றசாட்டுக்கள் வைக்கப்படுவதின் பின்னனிகளை கொஞ்சம் பின்னோக்கி பார்க்கவேண்டும்...

அல்ஹாஜ் முஹம்மட் இப்றாஹிம் - (கல்முனை)

ரிசாட்டுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு, சொப்பிங் பேக்கோடு வந்தவருக்கு இவ்வளவு பணமா? என்றல்லாம் அவருடை எதிரிகள் பேசுவதை கேட்கின்றோம்.

இதே போன்று இதைவிட வீரியம் கொண்ட பிரச்சினைகள் ஹக்கீமுக்கு எதிராக வந்த போதல்லாம் யாரும் அதை பெரிது படுத்துவதில்லை.


காரணம் அவருக்கு அரசியல் எதிரி என்று யாரையும் அவர் சம்பாதித்து கொள்வதில்லை.எல்லா அரசியல் வாதிகளும் அவருக்கு பிரியானி கொடுத்து ஆதரிப்பார்கள்.


அதே நேரம் எந்த அரசாங்கம் வந்தாலும் அவருக்கு முன்னுரிமை கொடுப்பார்கள்,
காரணம்  அவர் எந்த  அரசியல் வாதிகளிடமும் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களில் முட்டி மோதுவது இல்லை அதனால் அவர் எல்லோருக்கும் நல்லவர்.

மறைந்த தலைவர் எல்லா அரசியல் வாதிகளுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கினார்.அதனால் அவர் பல இன்னல்களை சந்தித்தார்.

கல்முனையிலிருந்து வெரும் கையோடு வந்த அஸ்ரப்புக்கு இவ்வளவு பணமும் அந்தஸ்த்தும் எப்படி கிடைத்தது என்று கேட்டு கூத்தடித்தார்கள்.


பிறகு காலி டென்டர் விடயத்தில் கொள்ளையடித்து விட்டாய் என்று கூக்குரல் இட்டார்கள்,அனுரா பண்டாரநாயக்கா பாராளுமன்றத்தில் அஸ்ரப்பின் கையை இஸ்லாமிய சட்டப்படி வெட்டவேண்டும் என்றார்.


அந்த அளவுக்கு அரசாங்க பணத்தை  கொள்ளை அடித்துள்ளார். என்று ரிச்சட் பத்திரன கூறியது மட்டுமல்ல செருப்பால் பாரளமன்றத்துக்குள் அஸ்ரப் அவர்களுக்கு எறிந்தார்.


சந்திரிக்கா பௌசி அவர்களை தன்னுடன்  வைத்துக்கொண்டு அவர் மூலமாக அஸ்ரப்பை ஆட்டிபடைத்தார் என்பதல்லாம் வரலாறு.


மறுபக்கம் தமிழ் தரப்பினர் சொல்லொன்னா துயரங்களை செய்தது மற்றுமன்றி அவரை கொலையும் செய்தனர்.


அஸ்ரப் உயிரோடு இருந்திருந்தால் பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் கடைசிவரையும் அழைத்திருக்கமாட்டார்.
அஸ்ரப் வழிந்து சென்று பிரியாணி சாப்பிட்டு இருக்கவும் மாட்டார்.
ஏனென்றால் பிரபாகரன் எப்படி நானயமானவர் என்று அஸ்ரப்புக்கு தெறியும்.

இப்போது விடயத்துக்கு வருவோம். ஹக்கிமை போல் அஸரப்பும் அரசியல் செய்திருந்தால் இந்த நிலை அவருக்கு வந்திருக்காது.அதே போன்றுதான் ரிசாட்டுக்கும் பல எதிர்ப்புக்கள் வந்த வன்னம் உள்ளது.

ஒன்று அரசியலை விட்டு ரிசாட் ஒதுங்க வேண்டும்.அல்லது கொல்லப்படவேண்டும்.
அல்லது ஹக்கீமைபோல் அரசியல் செய்ய வேண்டும்.

இதுதான் தீர்வாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கின்றேன்....

தங்கம் தான் கஸ்டப்படும்..
மண்னு மன்றியிட்டு கிடக்கும்..
இந்த விடயங்களை புரிந்து கொண்டால் சரிதான்....

குற்றசாட்டுக்கள் வைக்கப்படுவதின் பின்னனிகளை கொஞ்சம் பின்னோக்கி பார்க்கவேண்டும்... குற்றசாட்டுக்கள் வைக்கப்படுவதின் பின்னனிகளை கொஞ்சம்  பின்னோக்கி பார்க்கவேண்டும்... Reviewed by Madawala News on 8/27/2016 10:36:00 PM Rating: 5